மே மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை..!! வங்கி பணிகளை திட்டமிட்டுக்கோங்க!!

தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும்.

பொதுமக்கள் தங்களது வரவு – செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.

அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. மே மாதத்தில் சுமார் 12 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே மாத வங்கி விடுமுறை பட்டியல்:

மே 1, 2023 – திங்கட்கிழமை – மே தினம், மகாராஷ்டிரா தினம்

மே 5, 2023 – வெள்ளிக்கிழமை – புத்த பூர்ணிமா (டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், உத்தரகண்ட், அசாம், பீகார், குஜராத், அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர்)

மே 7, 2023 – ஞாயிற்றுக்கிழமை

மே 9, 2023 – செவ்வாய்க்கிழமை – ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள்

மே 13, 2023 – சனிக்கிழமை – இரண்டாவது சனிக்கிழமை

மே 14, 2023 – ஞாயிற்றுக்கிழமை

மே 16, 2023 – செவ்வாய்க்கிழமை – சிக்கிம் தினம்

மே 21, 2023 – ஞாயிற்றுக்கிழமை

மே 22, 2023 – திங்கட்கிழமை – மகாராணா பிரதாப் ஜெயந்தி (குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான்)

மே 24, 2023 – புதன்கிழமை – காசி நஸ்ருல் இஸ்லாம் ஜெயந்தி (திரிபுரா)

மே 27, 2023 – சனிக்கிழமை – 4வது சனிக்கிழமை

மே 28, 2023 – ஞாயிற்றுக்கிழமை

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.