வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு 2வது முறையாக இந்திய அணி தகுதிப்பெற்றது. ஜூன் 7ல் துவங்க உள்ள பைனலுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2021-23) பைனல், ஜூன் 7-11, லண்டன், ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதில் பைனலுக்கு நுழையப்போகும் அணிக்களுக்கான போட்டியில், ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகள் இருந்தன. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 போட்டியிலும், ஆஸி., ஒரு போட்டியிலும், வென்றிருந்தது. இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி முதல் போட்டியில் தோல்வியுற்றது.
இதனையடுத்து புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெற்ற ஆஸ்திரேலியா (66.67), இந்தியா (58.80) அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதிப்பெற்றன. ஜூன் 7-11 வரை நடைபெற உள்ள பைனலுக்கான இந்திய அணி இன்று (ஏப்.,25) அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி விபரம்: ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோஹ்லி, ரகானே, கேஎல் ராகுல், கே.எஸ் பரத், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், உனத்கட்
இரண்டாவது முறை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனல் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக (2019-2021, 2021-23) பைனலுக்கு முன்னேறியது. முன்னதாக நடந்த 2019-2021 பைனலில் இந்தியா, நியூசிலாந்திடம் தோற்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement