கார் விபத்து வழக்கில் பிரபல நடிகை ஆஜர்!!

கார் விபத்து வழக்கு தொடர்பாக பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி நடிகை யாஷிகா ஆனந்த் அவரது மூன்று நண்பர்களுடன் புதுச்சேரியில் இருந்து காரில்சென்னை திரும்பிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார்.

மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான ஹைதராபாத்தை சேர்ந்த வள்ளி பவானி செட்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

யாஷிகா மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு மீது விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் வாய்தா கடந்த மாதம் 21ஆம் தேதி வந்தபோது யாஷிகா ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து யாஷிகா மார்ச் 25ஆம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அவரை ஏப்ரல் 25ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இன்று நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜீலை 27ஆம்தேதி மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.