புதிய தலைமுறை கேடிஎம் 390 டியூக் பைக்கின் சோதனை ஓட்ட படங்களின் மூலம் தோற்ற அமைப்பில் இடம்பெற உள்ள மாற்றங்கள் மற்றும் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது.
குறிப்பாக புதிய மாடல் இந்நிறுவனத்தின் 1290 சூப்பர் டியூக் R பைக்கின் தோற்ற உந்துதலை தழுவியதாக காணப்படுகின்றது. இதன் மூலம் கேடிஎம் பைக் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2024 KTM 390 Duke
புதிய பைக்கின் தோற்றத்தின் டிசைன் அம்சங்கள் விற்பனையில் உள்ள உயர் ரக 1290 சூப்பர் டியூக் R மாடல்களில் உள்ள நிறம் மற்றும் வடிவமைப்பினை தழுவியதாக உள்ளது. முதன்முறையாக 390 டியூக் பைக்கில் நீல நிறத்தை கொண்டுள்ளது.
பெட்ரோல் டேங்கின் எக்ஸ்டென்ஷன்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 390 டியூக் பைக்கின் கடினமான வடிவமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் டேங்க் பார்வைக்கு சற்று வித்தியாசமாகத் தோன்றுகிறது. முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள அட்ஜெஸ்டபிள் செய்யக்கூடிய ஃபோர்க்கு கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஹெட்லைட் யூனிட் வித்தியாசமாக இருப்பது போல் தெரிகிறது. சுவிட்ச் கியர் மற்றும் TFT டேஷ் ஆகியவை புத்தம் புதிய யூனிட்களாக இருக்கலாம். மிக முக்கிய வசதியாக IMU, ஏபிஎஸ் மற்றும் டிராக்சன் கண்ட்ரோல் ஆகியவற்றை பெறும்.
என்ஜின் தோற்றம் புதுப்பிக்கப்பட்டுள்ளதால் புதிய 373cc என்ஜின் இடம்பெற்றிருக்கலாம். இதன் காரணமாக கூடுதலான பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தலாம். மற்றபடி வேறு எவ்விதமான தகவலும் தற்பொழுது கிடைக்கவில்லை.
image source- instagram/iamabikerdotcom