கார்ட்டோம்: சூடானில் உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில் சர்வதேச அளவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
சூடானில் உள்நாட்டு போர் உச்சத்தில் உள்ளது. பொதுவாக உள்நாட்டு போர்.. அரசுக்கும் – மக்களுக்கும் இடையில் நடக்கலாம். அரசுக்கும் போராளிகளுக்கும் இடையில் நடக்கலாம். அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையில் கூட நடக்கலாம்.
ஆனால் சூடானில் நடப்பது அங்கே இருக்கும் இரண்டு வகையான ராணுவ படைகளுக்கு இடையிலான மோதல். அங்கே உள்ள ராணுவம் மற்றும் ஆர்எஸ்எப் எனப்படும் ராபிட் சப்போர்ட் போர்ஸ் இடையே இந்த மோதல் நடக்கிறது.
கடந்த 2021ல் சூடானில் ஆட்சியை கவிழ்த்த போது இவர்கள் இரண்டு தரப்பும் ஒன்றாகவே இருந்தன. ஆனால் கடந்த சில காலமாக இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் ஆர்எஸ் எப் அமைப்பை ராணுவத்துடன் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
அப்போதுதான் நாட்டை யார் ஆள்வது.. ராணுவத்தை யார் கட்டுப்படுத்துவது என்ற மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தற்போது அங்கே மிகப்பெரிய உள்நாட்டு போராக மாறி உள்ளது. ராணுவம் பெருசா – ஆர்எஸ்எப் பெருசா என்று மாறி மாறி மோதிக்கொள்கிறார்கள்.
இதில் இரண்டுமே ராணுவம்தான் என்பதாலும் இரண்டு தரப்பிடமும் ஆயுதங்களும் பயிற்சி பெற்றவர்களும் இருப்பதாலும் மோதல் இப்போதைக்கு முடியாது. மோதல் இன்னும் மோசமாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கே நடக்கும் உள்நாட்டு போரில் இதுவரை 185 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
அதிமுக தொடர்பு: அதிமுகவில் நிலவியதே இரட்டை தலைமை பிரச்சனை அதே இரட்டை தலைமை பிரச்சனைதான் சூடானிலும் ஏற்பட்டு உள்ளது.
அங்கே ராணுவத்தின் ஜெனரல் அல் புர்ஹான் மற்றும் ஆர்எஸ்எப் ஜெனரல் டகாலோ இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
கடந்த 2021 இவர்கள் இருவரும் இணைந்துதான் அங்கே பல காலமாக ஆட்சியில் இருந்த உமர் அல் பஷீர் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்தனர். இவர்கள் புரட்சி செய்து ஆட்சியை பிடித்தனர்.
இதையடுத்து புர்ஹான் ஆட்சியின் தலைவராகவும், ஆர்எஸ்எப் தலைவர் டகாலோ ஆட்சியின் துணை தலைவராகவும் அறிவிக்கப்பட்டார். அதாவது இரட்டை தலைமைக்கு பதிலாக ஒற்றை தலைமை.. அவருக்கு துணை தலைமை என்று அறிவிக்கப்பட்டது.
இதையும் கூட டகாலோ ஏற்றுக்கொண்டு அமைதியாக இருந்தார்.
ஆனால் கடந்த சில காலமாக இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் ஆர்எஸ் எப் அமைப்பை ராணுவத்துடன் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவால் டகாலோவிற்கு புர்ஹானுக்கு இணையான பவர் கொடுக்கப்பட்டது.
அதாவது அதிமுகவில் இருந்த அதே இரட்டை தலைமை பிரச்சனைதான் இங்கும் ஏற்பட்டது. தலைமை பதவியை பகிர்ந்து கொள்ள புர்ஹான் விரும்பவில்லை. இதனால் இரண்டு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது.
அப்போதுதான் நாட்டை யார் ஆள்வது.. ராணுவத்தை யார் கட்டுப்படுத்துவது என்ற மோதல் ஏற்பட்டது. இங்கே அரசியல் கட்சி என்பதால் கோர்ட்டுக்கு போய் பிரச்னையை சரி செய்துவிட்டனர்.
ஆனால் அங்கே இரண்டும் ராணுவ குழுக்கள் என்பதால் இரண்டு தரப்பிற்கும் இடையே ஆயுத மோதல் ஏற்பட்டு அது உள்நாட்டு போராகி உள்ளது.
வைரஸ்கள் : சூடானில் உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில், அங்கே வைரஸ்கள் அடங்கிய முக்கிய லேப் ஒன்று போராளிகள் குழுவிடம் கையில் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அங்கே இருக்கும் வைரஸ் ஆராய்ச்சி கூடம் ஒன்றை ஆர்எஸ்எப் கைப்பற்றி உள்ளது. இங்கே பல லட்சம் வைரஸ் சாம்பிள்கள் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இதை தவறாக கையாண்டலோ அல்லது இங்கே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டாலோ அங்கிருந்து வைரஸ்கள் வெளியேறும் அபாயம் உள்ளது.
இதனால் உலகிற்கே கூட ஆபத்து ஏற்படலாம் என்பதால் பெரும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக, சூடான் ஆர்எஸ்எப் போராளிகளின் கட்டுப்பாட்டிற்குள் வைரஸ் மாதிரிகள் அடங்கிய ஆய்வகம் சென்றது மிகவும் சீரியஸான விஷயம். இதனால் உலகிற்கே ‘பெரிய உயிரியல் ஆபத்து’ இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதனால் அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.