வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக உள்ள 7 இருக்கை பெற்ற சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரின் படங்கள் முதன்முறையாக கசிந்துள்ளது. குறிப்பாக இந்த கார் விற்பனையில் உள்ள சி3 மாடலை அடிப்படையாக கொண்டிருக்கும்.
புதிய காரின் வெளிப்புற தோற்ற அமைப்பு, டேஸ்போர்டு, கிளஸ்ட்டர், போன்றவை கசிந்துள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பெற்றிருக்கலாம்.
சிட்ரோன் C3 ஏர்கிராஸ்
சிட்ரோன் கார்களுக்கு உரித்தான தோற்ற அமைப்புடன் கூடிய க்ரோம் கிரில் லோகோ கொடுக்கப்பட்டு எல்இடி விளக்குகள் மற்றும் பியானோ பிளாக் ஃபினிஷ் ஆகியவற்றின் கலவையானது முன்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
டாஷ்போர்டு தொடர்பான படத்தில் விற்பனையில் கிடைக்கின்ற C3 காரை போலவே உள்ளது. ஆனால் சற்று அகலமான டேஸ்போர்டாக காட்சியளிக்கின்றது. டச்ஸ்கிரீன் உடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் 10.2-இன்ச் டிஸ்பிளே பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறக்கூடும்.
C3 ஏர்கிராஸ் காரில் டிரைவ் மோடுகளையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை பயணிகளுக்கு மேற்கூரையில் ஏசி வென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்றாவது வரிசையில் உள்ள பயணிகளும் USB சார்ஜிங் போர்ட்களைப் பெறுகின்றனர்.
விற்பனையில் உள்ள C3 எஸ்யூவி காரில் 110PS 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால், அதே என்ஜினை பகிர்ந்து கொள்ளும் அல்லது சற்று கூடுதலான 130PS வெளிப்படுத்தலாம். ஆறு ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என இரண்டிலும் வரக்கூடும்.
ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற கார்களை சிட்ரோன் C3 ஏர்க்ராஸ் எதிர்கொள்ளும்.