ராம்சரண் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அல்லு அர்ஜுன்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் மகனாக வாரிசு நடிகராக திரையுலகில் நுழைந்தவர் நடிகர் ராம்சரண். இன்று தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் அளவில் வரவேற்பை பெற்ற மிகப்பெரிய நடிகராக தன்னை செதுக்கி கொண்டுள்ளார்.. இவருக்கும் அப்போலோ குழுமத்தை சேர்ந்த உபாசனாவுக்கும் கடந்த 2012ம் வருடம் திருமணம் நடைபெற்றது.

இந்தநிலையில் உபாசனா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை கடந்த டிசம்பர் மாதம் குடும்பத்தினர் வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து தம்பதியினர் இருவருக்கும் ரசிகர்களிடமிருந்தும் திரையுலகத்தினரிடம் இருந்தும் இப்போதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.. சமீபத்தில் உபாசனாவின் வளைகாப்பு நிகழ்ச்சி அவர்கள் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொள்ள நடைபெற்றது. இதில் நடிகர் அல்லு அர்ஜுனும் கலந்துகொண்டு உபாசனாவை வாழ்த்தியுள்ளார். மேலும் அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராம்சரனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றபோது அதில் அல்லு அர்ஜுன் கலந்து கொள்ளவில்லை என்கிற குறை ராம்சரண் குடும்பத்தினர் மத்தியில் இருந்ததாக சொல்லப்பட்டு வந்தது.. ராம்சரண் ரசிகர்களும் அதுகுறித்து தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி அல்லு அர்ஜுனை விமர்சித்து வந்தனர். தற்போது இந்த வளைகாப்பு நிகழ்வில் கலந்துகொண்டு அந்த மனக்குறையை போக்கிவிட்டார் அல்லு அர்ஜுன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.