பிரித்தானியாவின் வேல்ஸில் பணியின்போது நபருடன் பாலியல் உறவுகொண்டதால் பதவியை துறந்த பெண் காவலர், தன் மீதான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
பணியின்போது பெண் காவலர் செய்த குற்றம்
வடக்கு வேல்ஸில் காவலராக பணியாற்றி வந்த ஆண்ட்ரியா கிரிஃபித்ஸ் (44) என்ற பெண், கடந்த 2015ஆம் ஆண்டில் அவரது பார்வையில் இருந்த பாதிக்கப்பட்ட ஆண் ஒருவருடன் பாலியல் உறவுகொண்டுள்ளார்.
இந்த விடயம் தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் மோசமான ஒழுக்க நடவடிக்கை விசாரணையை எதிர்கொள்ள தயாரானார்.
அதன் பின்னர் மிஸ்டர் எக்ஸ் என்று அழைக்கப்படும் அந்த நபருடன் ஒருமுறை மட்டுமே உறவுகொண்டதாக ஒப்புக்கொண்ட ஆண்ட்ரியா, அதற்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக தனது அறிக்கையில் கூறினார்.
மேலும், அவமானத்தைத் தவிர்ப்பதற்காக நான் நார்த் வேல்ஸ் காவல்துறையில் இருந்து உடனடியாக ராஜினாமா செய்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.
மேல்முறையீடு செய்யும் காவலர்
இந்த நிலையில் அவர் காவல் படையில் இருந்து தடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பார் என்பதை எதிர்த்து ஆண்ட்ரியா போராடுகிறார்.
வடக்கு வேல்ஸில் உள்ள காவல் தலைமையகத்தில் பத்திரிகைகள் மற்றும் பொதுமக்களை விலக்கி ஒரு தீர்ப்பாய விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், ஆண்ட்ரியாவின் வழக்கறிஞர் மேல்முறையீட்டு விசாரணையை தனிப்பட்ட முறையில் நடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கோரிக்கை ஏற்பு
இதனால் மூன்று நாட்கள் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது.
இதற்கிடையில், விசாரணை குழுவின் தலைவர் மைக்கேல் கேப்லான் கேசி கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட மருத்துவ ஆதாரங்களை பரிசீலித்து, தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்துவது குறித்து கவனமாக பரிசீலித்து முடிவு செய்துள்ளோம்.
சரியான நேரத்தில் எங்கள் முடிவு, ஆனால் அனைத்து காரணங்களும் பொதுவில் தெரிவிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.