பொன்னியின் செல்வன் 2 படத்தை தொடர்ந்து கமல் படம் தான்.. ப்ரோமோ சூட்டிற்கு திட்டமிடும் மணிரத்னம்!

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படம் இன்னும் இரு தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் பிரமோஷன்களில் தற்போது மிகவும் பிசியாக மணிரத்னம், படத்தின் நடிகர், நடிகைகளுடன் ஈடுபட்டுள்ளார்.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனை மணிரத்னம் இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமல் படத்தின் பிரமோ சூட் : நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 படம் இன்னும் இரு தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாகி சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்த நிலையில், இரண்டாவது பாகமும் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தை வரலாற்றுப் பின்னணியில் இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் படைப்பையொட்டி இந்தப் படத்தின் இரு பாகங்களும் இயக்கப்பட்டுள்ளது. முன்னதாக இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலி படங்களை தொடர்ந்தே பொன்னியின் செல்வன் படங்களை இயக்கும் நம்பிக்கையும் தைரியமும் தனக்கு ஏற்பட்டதாக தனது பேட்டியொன்றில் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்திற்கும் சிறப்பான பிரமோஷன்களை படக்குழுவினர் கொடுத்து வருகின்றனர். கடந்த இரு மாதங்களாக பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு சிறப்பான பிரமோஷன்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. படத்தின் நடிகர், நடிகைகளும் படத்திற்கான பிரமோஷனல் டூரில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் துவங்கிய இவர்களது பயணம் கோவை, டெல்லி, கொச்சி, பெங்களூரு என நீண்டது.

Director Maniratnam planned for Kamal haasan movie promo shoot after PS2 release

அவ்வப்போது பத்திரிகையாளர்களையும் படக்குழு சந்தித்து பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனின் படத்தை இயக்கவுள்ளார் இயக்குநர் மணிரத்னம். தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரமோஷன்களில் மிகவும் பிசியாக உள்ள அவர், ரிலீசுக்கு பிறகு கமல் படத்தின் பணிகளில் மும்முரமாக ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விக்ரம் படத்தில் செய்தது போலவே, இந்தப் படத்திற்கான ப்ரமோ சூட்டும் இரண்டு நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மே மாதம் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் இந்த ப்ரமோ சூட் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூட்டிங்கில் கமலை, மணிரத்னம் எப்படி கொண்டு வருவார் என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். விக்ரம் படத்தில் லோகேஷின் ஸ்டைல் இருந்த நிலையில், இந்தப் படத்தில் மணிரத்னம் எப்படிப்பட்ட கமலை வெளிப்படுத்துவார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.