பாகிஸ்தானில் காவல்நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்.. 8 போலீசார் உட்பட 10 பேர் பலி..!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள காவல்நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 8 போலீசார் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

கபால் நகரில் உள்ள காவல்நிலைய வளாகத்தில் பயங்கரவாத தடுப்புத்துறை அலுவலகமும், மசூதி ஒன்றும் செயல்பட்டு வரும் நிலையில், திங்கட்கிழமையன்று அங்கு 2 முறை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இதில் கட்டடம் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து அம்மாகாணம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.