“கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அரசியல் உச்சத்தில் இருக்கும்” – அமித் ஷா

கர்நாடகாவில் ஒருவேளை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வாரிசு அரசியல் உச்சத்தில் இருக்கும் என்றும், ஒட்டுமொத்த கர்நாடகாவும் கலவரங்களால் பாதிக்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாகல்கோட் என்ற பகுதியில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாநிலத்தின் வளர்ச்சி ரிவர்ஸ் கியரில் சென்று விடும் என்று விமர்சித்தார்.

பாஜகவால் மட்டுமே புதிய கர்நாடகத்தை வழிநடத்த முடியுமென்று கூறிய அமித் ஷா, மாநிலத்தில் மீண்டும் இரட்டை எஞ்சின் ஆட்சியை அமைக்க வாக்காளர்கள் பாஜகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.