PS 2: சூப்பர்ஸ்டாரிடம் இருந்து தான் அதை கற்றுக்கொண்டேன்..சீயான் விக்ரம் பேச்சு..!

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
இன்று இந்திய சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக வலம் வரும் விக்ரம் 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். என்னதான் 1990 ஆம் ஆண்டே விக்ரம் சினிமாவில் அறிமுகமானாலும் அவருக்கு முதல் வெற்றி 1999 ஆம் ஆண்டு வெளியான சேது படத்தின் மூலமே கிடைத்தது.

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஒரு வெற்றி படத்திற்காக கடுமையாக போராடினார் விக்ரம். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சிறப்பான டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் வலம் வந்த விக்ரம் அப்பாஸ், பிரபு தேவா போன்ற நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ளார்,

Ayalaan: இரண்டு பாகங்களாக வெளியாகும் அயலான் ? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

இந்நிலையில் பாலா இயக்கத்தில் வெளியான சேது படத்தின் மூலம் முதல் வெற்றியை ருசித்த விக்ரம் அதன் பின் அவர் திரைவாழ்க்கையில் திரும்பி பார்க்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தில், தூள், சாமி, அந்நியன் என தொடர் வெற்றிகளின் மூலம் முன்னணி ஹீரோவாக உருவெடுத்தார் சீயான்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

என்னதான் இவரது சில படங்கள் தோல்வியை சந்தித்தாலும் அப்படங்களில் தன் அபாரமான நடிப்பினால் ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகின்றார் விக்ரம். இதற்கு கடந்தாண்டு வெளியான கோப்ரா திரைப்படம் சிறந்த சான்றாகும். பல கெட்டப்களில் கஷ்டப்பட்டு அபாரமான நடிப்பை கோப்ரா படத்தில் வெளிப்படுத்தியிருப்பார் விக்ரம்.

ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. இருந்தாலும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார் விக்ரம். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் வெளியாகவுள்ளது.

இதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவுடன் இணைந்து ஈடுபட்டு வருகின்றார் விக்ரம். இந்நிலையில் தற்போது விக்ரம் பல ஆண்டுகளுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டி தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு அப்பேட்டி எடுக்கப்பட்டுள்ளது.

அதில் பேசிய விக்ரம், நடிக்க வந்த புதிதில் எனக்கென்று ஒரு ஸ்டைலை உருவாக்க எனக்கு தெரியாது. அதனை நான் சூப்பர்ஸ்டார் ரஜினியை பார்த்து தான் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு படத்திலும் புது புது ஸ்டைலை உருவாக்கி வருகின்றார் ரஜினி. அது ரசிகர்களால் வெகுவாக ஈர்க்கப்படுகின்றது.

எனவே அவரை பார்த்து தான் நான் ஒவ்வொரு படத்திலும் விதவிதமான ஸ்டைலை உருவாக்க முயற்சித்து வருகின்றேன் என்றார் விக்ரம். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகின்றது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.