சென்னை: அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகம் ₹9.5 கோடிக்கு தரமற்ற பசுந்தேயிலைகளை கொள்முதல் செய்து உள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன், இதுதான் அதிமுக ஆட்சியின் கொள்கையாகவே இருந்தது. இதை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்பலப்படுத்தினார். தற்போது மத்திய கணக்கு தணிக்கையாளரின் அறிக்கை அதனை உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியாளர்கள் ஜெயலலிதாவிற்கு அடிமையாக இருந்தவர்கள். பிறகு சசிகலாவுக்கு அடிமையானார்கள். […]
