வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெனிவா: சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
வட ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் இடையே, சமீபத்தில் மோதல் வெடித்தது. தலைநகர் கார்துாம் உட்பட பல இடங்களில் வன்முறை வெடித்தது. இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள், தங்கள் நாட்டினரை மீட்கவும், பொது மக்கள் நலன் கருதியும் போர் நிறுத்தத்திற்கு ஒத்துழைக்கும்படி, சூடானின் ராணுவ படைகளிடம் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்ற ராணுவப் படைகள், மூன்று நாட்களுக்கு போரை நிறுத்த ஒப்புக் கொண்டன.
இது தொடர்பாக, ஐ.நா.தூதர் வோல்கர் பெர்தஸ் கூறுகையில், அமெரிக்காவின் தலையீட்டால் 72 மணி நேர போர் நிறுத்துவதற்கு இரு தரப்பும் சம்மதித்தாலும் கூட, அங்கு முழுவீச்சில் அமல்படுத்தப்படவில்லை. ஆங்காங்கே மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இரு தரப்புமே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை.
ஆட்சி அதிகாரத்தை ஆயுத பலம் மூலம் வசமாக்கலாம் என்ற நம்பிக்கையில் போர் புரியும். இருதரப்புமே அமைதிக்கு தயாராக இல்லை. இந்தச் சூழலில் சூடானில் அமைதி நிலை திரும்புவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement