இந்தியாவில் கோவிட் பாதித்த 11,967 பேர் டிஸ்சார்ஜ்| 11,967 people infected with Covid have been discharged in India

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 11,967 பேர் குணமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,031 பேருக்கு மேற்கொண்ட சோதனையில் 9,629 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,05,827 -லிருந்து 4,49,15,456 ஆக அதிகரித்துள்ளது.

latest tamil news

கோவிட் பாதித்த 29 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5,31,398 ஆனது. கடந்த 24 மணிநேரத்தில் 11,967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து 63,380 ஆக இருந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 61,013 ஆக குறைந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.