வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
சமீபத்தில் ஜப்பானின் புகழ் பெற்ற செர்ரி ப்ளாசம் திருவிழாவைக் காண ஒரு குழுவுடன் இணைந்து ஜப்பான் சென்றிருந்தேன். ஆஹா! என்ன ஒரு அற்புதமான அனுபவம்!
ஜப்பான் முழுவதும் வசந்த காலத்தில் அழகாக பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள் நம்மை மயக்கி சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்வது பிரமிப்பாக இருக்கிறது.!. அழகான ஜப்பானியக் குழந்தைகள் மகிழ்வுடன் கைகளை ஆட்டி வரவேற்பது போல் உணர்ந்தேன்.
உலகின் பல பகுதிகளிலிருந்தும் செர்ரி மலர் திருவிழாவைக் காண வந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. செர்ரி மலர்கள் வருடத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டுமே பூக்கின்றன.
பிறகு உடனே பூக்கள் உதிர்ந்து இலைகள் வந்து விடுகின்றன. “எதுவும் எப்போதும் நிலைக்காது” இது ஜப்பானியர்களின் நம்பிக்கை. பூத்திருக்கும் செர்ரி மலர் மரங்களின் கீழ் அமர்ந்து உணவு, பானங்கள் மற்றும் இசையுடன் செர்ரி மலர் திருவிழாவைக் கொண்டாடுகினறனர். நாங்களும் அதை அனுபவித்தோம்.

உதய சூரியனின் நாடு என அழைக்கப்படும் ஜப்பான் பாரம்பரியக் கலைகள் மற்றும் பழமையான நாகரிகத்தைக் கடைபிடித்தாலும் உலகின் வேறெங்கும் இல்லாத தொழில் நுட்பங்கள் கொண்ட நாடு. தாம் செய்யும் பணிகளில் ஒழுக்கம், நேரம் தவறாமை, நேர்மை, சுறுசுறுப்பு நம்மை வியக்க வைக்கிறது, வயதானவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை, பணிவு, செய்யும் உதவி , எங்கும் சுத்தம் எதிலும் சுத்தம் என அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன.
கோவில்கள், வழிபாடு, சிவப்பு நிற டோரி, திருவிழாக்கள் அனைத்துமே ந்ம் நாட்டு முறையில் இருப்பது போல எனக்குத் தோன்றியது. கோவில் முகப்பின் வாயிலில் நம் கோவில்களில் உள்ள துவாரபாலகர்கள் போல் உருவங்கள் இருபுறமும் இருக்கின்றன . நாம் அன்னபூரணியை வழிபடுவது போல இங்கும் அரிசி தேவதையை வணங்கி நன்றி செலுத்துகிறார்கள். மீனவர்களின் கடவுளுக்கென கோவில் உள்ளது.

கோவில்கள், வழிபாடு, சிவப்பு நிற டோரி, திருவிழாக்கள் அனைத்துமே ந்ம் நாட்டு முறையில் இருப்பது போல எனக்குத் தோன்றியது. கோவில் முகப்பின் வாயிலில் நம் கோவில்களில் உள்ள துவாஜப்பானிய பாரம்பரிய உடையான “கிமோனோ” உடையை நாங்களும் அணிந்து மகிழ்ந்தோம்.
அவர்களின் பாரம்பரிய தேநீர் மற்றும் அரிசி உணவான சுஷியை சுவைத்தோம். ஆனால் அதன் சுவை எனக்குப் பிடிக்கவில்லை. இங்குள்ள வெந்நீர் நீரூற்றுகளில் வேக வைத்த முட்டைகள் கறுப்பு நிறமாக மாறி விடுமாம். அந்த ஒரு முட்டையை சாப்பிட்டால் வாழ்நாளின் ஏழு வருடங்கள் கூடும் என்பது ஜப்பானியர்களின் நம்பிக்கை என்று எங்கள் கைடு பிரதீப் கூறினார் .

புல்லெட் ரயிலில் ஹிரோஷிமா சென்றது மறக்க முடியாத அனுபவம். காற்றில் பறப்பது போல் உணர்ந்தேன். ஹிரோஷிமாவின் அமைதி பூங்காவைப் பார்வையிட்ட போது ஆகஸ்ட் 6 1945ல் வீசப்பட்ட அணு ஆயிதத்தால் தாக்கப்பட்டு இறந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களை நினைத்து மனம் கலங்கியது.
ஜப்பானின் உயரமான ஃபூஜி எரி மலையின் நான்காவது லெவல் வரை நாங்கள் செல்ல முடிந்தது. அந்த இடத்திலேயே தாங்க முடியாத குளிர் நடுக்கியது. பிறகு இன்னும் சில முக்கிய இடங்களான உயரமான TOKYO SKY TREE, புத்தர் கோவில் என சென்று விட்டு பறப்படும் முன் “சயோனாரா” என்று எங்கள் ஜப்பானிய கைடு குமியிடம் சொல்லி விடை பெற்றோம்.
வி.ரத்தினா
ஹைதராபாத்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.