
ஒவ்வோர் ஆண்டும், பருவமழையின் தொடக்க காலமான ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மிருகசீர கார்த்திகையின்போது மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு ஹைதராபாத், நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் நடைபெறும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகள் இந்த மீன் பிரசாதத்தைப் பெற அங்கே கூடுவது வழக்கம்.
இந்த நிகழ்வில் விரால் மீனின் வாயில் மஞ்சள் நிற மூலிகை பேஸ்டை வைத்து ஆஸ்துமா நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும். சைவ உணவுக்காரர்களுக்கு இந்த மருந்தை வெல்லத்தோடு சேர்த்துக் கொடுக்கப்படும். தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இதை எடுத்துக்கொண்டால் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், கொரோனா காரணமாக மூன்று ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன் பிரசாத விநியோகம் இந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 9ஆம் தேதி காலை 8 மணி முதல் ஜூன் 10 ஆம் தேதி காலை 8 மணி வரை நம்பப்பள்ளி கண்காட்சி மைதானத்தில் மீன் பிரசாதம் இலவசமாக வழங்கப்படும் என பத்தினி மிருகசீரா அறக்கட்டளையின் பிரதிநிதிகள் மற்றும் பத்தினி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஆஸ்துமா, இருமல், ஆஸ்துமா போன்ற தீராத சுவாச நோய்களுக்கு 190 ஆண்டுகளாக மீன் பிரசாதம் வழங்கி வருகிறோம் என்றார்.