இந்திய சந்தையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த BS6 Phase 2 நிகழ்நேர மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப கார், எஸ்யூவி மற்றும் வர்த்தக வாகனங்களை மாருதி சுசூகி மேம்படுத்தியுள்ளது. மேலும் புதிய E20 எரிபொருளுக்கு ஏற்ற என்ஜின் மற்றும் ESC பாதுகாப்பு அம்சத்தை வழங்கியுள்ளது.
மாருதி சுசூகி
மாருதி சுசூகி நிறுவனத்தின் பயணிகள் வாகன வரிசையில் உள்ள அனைத்து வாகனங்களும் BS6 இரண்டாம் கட்ட மேம்பாடு என அறியப்படுகின்ற ரியல் டிரைவிங் எமிஷன்ஸ் (RDE) அம்சத்துடன் மேம்படுத்தப்பட்ட ஆன் போர்டு கண்டறிதல் (OBD) அமைப்பையும் இந்த அப்டேட் அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்தப்படியாக, E20 எரிபொருளுக்கு ஏற்ற என்ஜின் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் அமைப்பினை அனைத்து கார்களும் பெறுகின்றது.
ஏப்ரல் தொடக்கத்தில் மாருதி சுஸுகி தனது சலுகைகளின் விலைகளை 0.8 சதவீதம் உயர்த்தியது.
சமீபத்தில் மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் விற்பனைக்கு ரூ.7.47 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த சில வாரங்களில் சுசூகி ஜிம்னி எஸ்யூவி காரும் வெளியாக உள்ளது.