இந்தியாவின் டாப் 10 இருசக்கர வாகனங்கள் – Fy 2023

இந்திய சந்தையில் கடந்த 2022-2023 ஆம் நிதியாண்டில் அதிகம் விற்பனை ஆகி டாப் 10 இடங்களை கைப்பற்றியுள்ள சிறந்த பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை அறிந்து கொள்ளலாம்.

இருசக்கர வாகன சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா நிறுவனமும் அபரிதமான வளர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது. முதல் 10 இடங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக்கின் 2022-2023 ஆம் நிதி வருடத்தில் விற்பனை எண்ணிக்கை 32,55,744 பதிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டை காட்டிலும் 22.15 சதவீத (26,65,386) வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இரண்டாம் இடத்தில் ஹோண்டா நிறுவனம், ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை 21,49,658 பதிவு செய்துள்ளது . கடந்த 2021-2022 நிதி ஆண்டை காட்டிலும் 25.84 சதவீத வளர்ச்சி (17,08,305) அடைந்துள்ளது.

TOP 10 Two Wheelers – FY 2022-2023

டாப் 10  FY  2023 FY 2022
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் 32,55,744 26,65,386
2. ஹோண்டா ஆக்டிவா 21,49,658 17,08,305
3. ஹோண்டா CB ஷைன் 12,09,025 11,01,684
4. ஹீரோ HF டீலக்ஸ் 10,52,034 11,65,163
5. பஜாஜ் பல்சர் 10,29,057 7,77,044
6. டிவிஎஸ் ஜூபிடர் 7,29,546 5,04,567
7. பஜாஜ் பிளாட்டினா 5,34,017 5,75,847
8. சுசூகி அக்செஸ் 4,98,844 4,60,596
9. டிவிஎஸ் XL100 4,41,567 4,73,150
10. டிவிஎஸ் அப்பாச்சி 3,49,082 3,25,598

டாப் 10 இருசக்கர வாகனங்களில் டிவிஎஸ் ஜூபிடர் அதிகபட்ச வளர்ச்சியாக 44.59 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 7,29,546 யூனிட்டுகளை 2023 ஆம் நிதியாண்டில் விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டில்  5,04,567 யூனிட்டுகளை விற்றது.

அடுத்து, பஜாஜ் ஆட்டோவின் பல்சர் பைக் விற்பனை 32.43 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. மிக மோசமான வளர்ச்சி பெற்ற மாடல்களில் பிரபலமான டிவிஎஸ் XL 100 உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.