தொலைக்காட்சி சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரட்சிதா, சின்னத்திரை நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2013–ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
நீண்ட வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்கிடையில் கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து கடந்த சில மாதங்களாக தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.இந்த நிலையில் தனியே வாழும் பெண்களும் வேலை செய்யும் பெண்களும் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்ற உத்தரவை பாம்பே உயர்நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது.
அந்த தீர்ப்பை வரவேற்று இன்ஸ்டாகிராமில், ‘இதுபோதும், இனி இதிலிருந்து பார்த்துக்கொள்ளலாம்‘ என ரட்சிதா பதிவிட்டுள்ளார்.மேலும் பிக்பாஸ் வீட்டில் ரட்சிதா ஏற்கனவே சொன்னது போல் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார் என்பது இந்த பதிவின் மூலம் தெரிய வந்துள்ளது.