இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று (26) இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிஷான் மதுஷ்க தனது கன்னி டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.
மதிய உணவு இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்பட்ட போது, இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 228 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதன்போது நிஷான் மதுஷ்க ஆட்டமிழக்காமல் 103 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இதன்படி, 115 ஓட்டங்கள் எடுத்திருந்த திமுத் கருணாரத்ன, மதிய உணவுக்கு முன் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். திமுத் கருணாரத்ன மற்றும் நிஷான் மதுஷ்க இணைந்து முதல் விக்கெட்டுக்கு 228 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 492 ஓட்டங்களை பெற்றது. தற்போது இலங்கை அணி அயர்லாந்தின் முதல் இன்னிங்ஸை விட 264 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.