இந்தி வேண்டாம் .. ப்ளீஸ்: மனைவியிடம் ஏ.ஆர். ரஹ்மான் வேண்டுகோள்: தீயாய் பரவும் வீடியோ.!

தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்தியா சினிமாவிலே பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ.ஆர். ரஹ்மான். பல மொழி படங்களுக்கு இசையமைத்து வந்தாலும் தமிழ் மொழி மீது மட்டும் இவருக்கு தனிக்காதல் உள்ளது. இதனை பல இடங்களில் வெளிப்படுத்தியும் உள்ளார். அவ்வாறு இசைப்புயல் ரஹ்மான் தமிழ் மொழிக்காக மேடையில் வைத்தே செய்துள்ள ஒரு சம்பவம் சோஷியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
ஏ.ஆர். ரஹ்மான் தமிழ் படங்களுக்கு சில காலமாக இசையமைக்கவில்லை என ரசிகர்கள் குறைப்பட்டு கொண்டிருந்த நிலையில் வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன், பத்து தல என வரிசையாக தமிழ் படங்களுக்கு இசையமைத்து மாஸ் காட்டினார். இதனையடுத்து இவரது இசையில் பொன்னியின் செல்வன் 2, அயலான், மாமன்னன் படங்கள் வெளியாகவுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பல மொழி படங்களுக்கு இசையமைத்து வந்தாலும் இந்தி திணிப்புக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்தவர் ஏ.ஆர். ரஹ்மான். தமிழ் மீது தனக்குள்ள அதீத ஈடுபாட்டை பல இடங்களில் பதிவு செய்துள்ளார் ரஹ்மான். இந்நிலையில் சென்னை நடைபெற்ற விருது விழா ஒன்றில் ரஹ்மான் தனது மனைவி சாயிரா பானுவுடன் கலந்துக்கொண்டார்.

அப்போது அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்ட போது ரஹ்மானின் மனைவி சாயிராவும் மேடைக்கு வந்தார். அப்போது ஏ.ஆர். ரஹ்மான், நான் என் பேட்டிகளை திரும்பி திரும்பி பார்க்க மாட்டேன். ஆனால் என் குரலுக்காகவே என் பேட்டிகளை திரும்ப திரும்ப பார்ப்பார் என தன் மனைவியை கூறினார்.

திடீரென நிறுத்தப்பட்ட ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு: மீண்டும் அதிரடியில் இறங்கிய தனுஷ்.!

உடனே தொகுப்பாளர்கள் சாயிராவையும் பேச சொல்லி மைக்கை கொடுக்க, இந்தில பேசாதீங்க. தமிழ்ல பேசுங்க. ப்ளீஸ் என தன் மனைவியிடம் அன்பு கட்டளை விடுத்தார் ஏ.ஆர். ரஹ்மான். இதனை பார்த்து மேடைக்கு கீழே இருந்த மணிரத்னம், சாய் பல்லவி ஆகியோர் வாய் விட்டு சிரித்தனர். அதனை தொடர்ந்து பேசிய அவர், சாரி. எனக்கு தமிழ்ல சரளமா பேச வராது. தயவுசெஞ்சு மன்னிச்சுருங்க.

Amala Paul: அந்த மாதிரி நடிச்ச எனக்கு இதெல்லாம் சாதாரணம்: நடிகை அமலா பால் அதிரடி.!

கணவருக்கு விருது கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சி. எனக்கு அவருடைய குரல் மிகவும் பிடிக்கும். அந்த குரல் மீது எனக்கு எப்போதும் காதல் உண்டு என ஆங்கிலத்தில் பேசினார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.