திமுக பிரமுகர்: ‘மனைவிக்கு பிறந்தநாள் உறுதிமொழி’.. அடடே சூப்பர் சார்.!

மனைவி பிறந்தநாளுக்கு

பிரமுகர் ட்விட்டரில் இட்ட பதிவு பேசுபொருளாகியுள்ளது.

ஐபோன் தொழிற்சாலைக்காக ரிஸ்க் எடுக்கும் திமுக அரசு? | Red pix Felix interview

யார் இந்த மகேந்திரன்.?

நடிகர் கமல்ஹாசன்

என்ற கட்சி தொடங்கிய போதிலிருந்தே, அவருக்கு அனைத்து வகைகளிலும் உறுதுணையாக செயல்பட்டவர் டாக்டர் மகேந்திரன். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட அக்கட்சிக்கு சுற்றி சுழன்று வேலை பார்த்தவர் மகேந்திரன். நாடாளுமன்றத் தேர்தலில் 3 சதவிகித வாக்குகளை அக்கட்சி பெற்றது. இந்த சூழலில் தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

அந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. அதிலும், கோவை தெற்குத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் கமல் தோற்றார். கமலுக்காக தனது சொந்த தொகுதியை விட்டுக் கொடுத்த மகேந்திரன்,

வெற்றிக்காக பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனாலும் கமல்ஹாசன் உள்பட கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது, மநீம ஆதரவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

திமுகவில் கமர்ஹாசனின் போர் வாள்

அதையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன், மவுரியா, சி.கே.குமரவேல், முருகானந்தம், உமாதேவி உள்ளிட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். பின்னர் திமுகவில் இணைந்த மகேந்திரனுக்கு, ஐடி விங் பிரிவில் இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தற்போது திமுகவிற்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் மகேந்திரன் களமாடி வருகிறார்.

இந்தநிலையில் தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் இட்ட பதிவு தற்போது பேசு பொருளாகியுள்ளது. இது குறித்து டாக்டர் மகேந்திரன் தனது ட்விட்டர் பதிவில், ‘‘இன்று நீங்கள் உங்கள் பிறந்தநாளை கொண்டாடுகிறீர்கள். உங்களின் அன்பும், ஆதரவும், வலிமையும் எனது உத்வேகத்தின் நிலையான வளமாக உள்ளது. நமது குடும்ப நலத்திற்காக நீங்கள் எண்ணற்ற தியாகங்களை செய்துள்ளீர்கள் மற்றும் செய்து கொண்டே இருக்கிறீர்கள். எங்களை மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் வைத்திருப்பதிலும், ஆரோக்கியத்துடன் வழிநடத்துவதிலும் நீங்கள் முதன்மையானவராக இருக்கிறீர்கள்.

அன்பே ஆருயிரே..

தன்னலம் இல்லாமல் அர்ப்பணிப்புடன் செயல்படும் உங்களுக்கு நான் எப்போதும் நன்றி உடையவனாக இருப்பேன். பல சிரமமிக்க தருணங்களில் எனக்கு நீங்கள் தந்த ஆதரவு, என்னை அத்தகைய கடுமையான நாட்களை வெற்றிகரமாக கடக்க உதவியது. நீங்கள் இல்லை என்றால் அது சாத்தியமே இல்லை என்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

அளவுகடந்த அன்பு செலுத்துவது என்பதை உங்களிடத்தில் தான் கண்டுகொண்டேன். என்னை வழிநடத்தும் பேரொளியாக நீங்கள் இருக்கிறீர்கள். இந்த பிறந்தநாளில் உங்களிடம் ஒரு உறுதிமொழியை கொடுக்க விரும்புகிறேன். எனது வாழ்க்கை நிறைவடையும் வரையிலும் உங்களிடத்தில் உள்ள அன்பும், ஆதரவும் குறையாது மேலும் ஒவ்வொரு நாளும் உங்களை கொண்டாடுவதை உறுதி செய்வேன்’’ என கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.