ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Aishwarya Rai Bachchan: பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சியில் ஜெயம் ரவி செய்த காரியம் பற்றிய வீடியோ வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பொன்னியின் செல்வன் 2மணிரத்னம் இயக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் ஏப்ரல் 28ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதையொட்டி அந்த படத்தில் நடித்திருக்கும் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள். ஹைதராபாத்தில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார் அருண்மொழி வர்மனான ஜெயம் ரவி.
ஜெயம் ரவிமேடைக்கு வந்த ஜெயம் ரவி தெலுங்கில் பேசி அக்கட தேசத்து ரசிகர்களை எல்லாம் இம்பிரஸ் செய்தார். அப்பொழுது அவர் கூறியதாவது, நான் பாதி தெலுங்கு, பாதி தமிழ். ஆனால் 100 சதவீதம் ஐஸ்வர்யா ராயின் ரசிகன் என்றார். அதை கேட்டு ஐஸ்வர்யா ராய் பச்சன் வெட்கப்பட்டு சிரித்தார். அரங்கில் இருந்த அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். ஜெயம் ரவி பேசிய வீடியோவை ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
ரசிகன்
ஐஸ்வர்யா ராய்பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்தவர்களின் பெயர்களை சொல்லிய ஐஸ்வர்யா ராய் அருண்மொழி வர்மனை ஜெயம் சார் என்று கூறி அவரின் கையை தொட்டார். அவ்வளவு தான் ஜெயம் ரவிக்கு சந்தோஷத்தில் கையும் ஓடல, காலும் ஓடல. மனிதர் செம குஷியாகிவிட்டார். மேலும் வெட்கமும்பட்டார். அவரின் ரியாக்ஷனை ரசிகர்கள் கவனிக்காமல் இல்லை.
மகிழ்ச்சிPonniyin Selvan 2: தெரியாமல் இடித்த ஐஸ்வர்யா ராய்: குஷியில் ஜெயம் ரவி என்ன செய்தார் தெரியுமா?பின்னர் ஜெயம் ரவியின் கையை பிடித்துக் கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தார் ஐஸ்வர்யா ராய். அப்பொழுது தெரியாமல் ஜெயம் ரவியை இடித்துவிட்டார். உடனே ரவிக்கு ஒரே சந்தோஷம் தான். ஹய்யா ஐஸ்வர்யா ராயே இடுச்சுட்டாங்களே என்பது போன்று ரியாக்ஷன் கொடுத்தார். அதை பார்த்து ஐஸ்வர்யா ராய்க்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
பெங்களூர்ஹைதராபாத் மட்டும் அல்ல பெங்களூரில் நடந்த பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சியிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் ஜெயம் ரவி. ரசிகர்களின் அன்பை பார்த்து கொஞ்சம் எமோஷனலாகி கண்கலங்கினார். அப்பொழுது ஹக் வேண்டும் என அங்கிருந்த ரசிகைகள் கேட்க, மேடையில் இருந்து குதித்து வந்து ஹக் செய்தார். அதை பார்த்து அனைவரும் கைதட்டினார்கள்.
குஷி
ரசிகைகள்Ponniyin Selvan 2: இதுலாம் நியாயமே இல்ல ஜெயம் ரவிணா: வருத்தத்தில் ரசிகைகள்பெங்களூர் ரசிகைகளை மட்டும் தான் ஹக் பண்ணுவீர்களா ஜெயம் ரவிணா?. எங்களை எல்லாம் ஹக் பண்ணக் கூடாதா என பிற நகரத்து ரசிகைகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த ரசிகைகளை ஹக் பண்ணது க்யூட்டாத் தான் இருந்துச்சு. ஆனால் எங்களுக்கு ஹக் கிடைக்கவில்லையே என லைட்டா பொறாமையாவும் இருந்துச்சு என்கிறார்கள் ஜெயம் ரவி ரசிகைககள்.