ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
மலையாள படங்களில் நடித்து வரும் ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத் பாசி ஆகியோர் பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்கள். அவர்கள் மலையாள படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது கேரள சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம். மேலும் கேரள சினிமா தொழிலாளர்கள் சங்கமும் அவர்களுக்கு தடை விதித்திருக்கிறது.
வைரமுத்துவை பங்கமாய் கலாய்த்த பாரதிராஜா!
கேரள மாநிலம் கொச்சியில் நேற்று நடந்த கூட்டத்தில் தான் ஷேன் நிகம் மற்றும் ஸ்ரீநாத்துக்கு தடை விதிப்பது என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
திமிராக நடந்து கொண்டதுடன், போதைப் பொருளும் பயன்படுத்திவிட்டு ஷூட்டிங்கிற்கு வந்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல மலையாள தயாரிப்பாளரான ரெஞ்சித் கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அவர் கூறியதாவது,
ஷேன் நிகமும் சரி, ஸ்ரீநாத் பாசியும் சரி போதைப் பொருள் பயன்படுத்திவிட்டு படப்பிடிப்புகளுக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் போதையில் இருந்ததால் படக்குழுவுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையூறாக இருந்தது என்றார்.
போதைப் பொருள் பயன்படுத்தும் நடிகர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை கேரள மாநில அரசிடம் கொடுக்கவிருப்பதாக அம்மா அமைப்பின் செயலாளர் பாபு தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போதையில் நிகழ்ச்சி தொகுப்பாளினியை தவறாக பேசயதாக நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டார். தான் நடித்த சட்டம்பி படத்தை விளம்பரம் செய்ய யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார் ஸ்ரீநாத். அப்பொழுது பேட்டி எடுத்த பெண் கேட்ட கேள்விகள் பிடிக்கவில்லை என்று கூறி கோபம் அடைந்தார் ஸ்ரீநாத். பேட்டியை உடனே நிறுத்துமாறு கூறினார்.
கேமராவுக்கு பின்னால் அந்த பெண் உள்ளிட்டவர்களை மோசமாக பேசியதுடன் மன்னிப்பு கேட்காமல் கிளம்பிவிட்டார். இதையடுத்து ஸ்ரீநாத் மீது அந்த யூடியூப் சேனல் ஆட்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள்.
பெண்ணிடம் தவறாக நடந்தது, பொது இடத்தில் கெட்ட வார்த்தை பயன்படுத்தியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ஸ்ரீநாத் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்கள். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். ஸ்ரீநாத்தை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தார்கள்.
தற்போது ஒரே டேட்ஸை பல பேருக்கு ஸ்ரீநாத் கொடுத்து நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் புகார், தடை பற்றி ஸ்ரீநாத் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே ஷேன் நிகம் அடிக்கடி பிரச்சனையில் சிக்கி வந்தார். வெயில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே தன் ஹேர்ஸ்டைலை மாற்றியதற்காக ஷேன் நிகமுக்கு கேரளா சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்தது.
வெயில் படத்தின் தயாரிப்பாளர் ஜோபி ஜார்ஜுக்கும், ஷேன் நிகமுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தயாரிப்பாளர் தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக ஷேன் தெரிவித்தார். வெயில் மற்றும் Qurubani ஆகிய படங்களின் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் கூறி ஷேனுக்கு தடை விதிக்கப்பட்டது.
Vijay: ட்விட்டரில் விஜய் அம்மா ஷோபா செய்த சாதனை: தளபதி அம்மானா சும்மாவா!
அண்மையில் ஆர்டிஎக்ஸ் படப்பிடிப்பில் ஷேன் நிகம் பிரச்சனை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது. தன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறி கோபப்பட்டு படப்பிடிப்பில் இருந்து கிளம்பிச் சென்றதாக செய்திகள் வெளியாகின.
ஷேன் நிகம் படப்பிடிப்பில் இருந்து கிளம்பிச் சென்றது பற்றி மலையாள சினிமா ரசிகர்கள் விமர்சித்தார்கள். இந்நிலையில் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.