கேதார் ஜாதவ்வை கிண்டலடித்த டுவீட்டை டெலிட் செய்த ஜிவி பிரகாஷ்

சமூக வலைத்தளங்கள் வளர்ந்த பிறகு கிண்டலடிப்பது வேறு, 'டிரோல்' செய்வது வேறு என்று பிரித்துப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் கிண்டலோ, டிரோலோ செய்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

நேற்று ஜிவி பிரகாஷின் டுவிட்டர் தளத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ்வை டிரோல் செய்யும் விதத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், “உலகத்தில் சிறந்த பினிஷர் கேதார் ஜாதவ். அதுவும் அந்த பீல்டர்ஸ எண்ணி பார்த்து அடிக்குற ஸ்டைல் இருக்கே, வேற லெவல். சிஎஸ்கே அணிக்கான எஞ்சியுள்ள தொடர்களில் அவரை கேப்டனாகப் பார்க்க ஆவலுடன் இருக்கிறோம். மேலும், இது பற்றிய தகவலுக்கு நாளை 5 மணிக்கு ஜெயம் ரவியின் டுவிட்டர் பதிவைப் பார்க்கவும்,” என்று பதிவிட்டிருந்தார். கேதார் ஜாதவ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

தற்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோரைக் கிண்டலடிப்பது போன்ற அந்தப் பதிவு ஏதோ ஒரு படத்திற்கான புரமோஷன் என்பது மட்டும் தெரிந்தது. அதில் பலரும் கண்டனம் தெரிவித்து கமெண்ட் போட்டிருந்தனர். ஒரு கிரிக்கெட் வீரரைக் கிண்டலடித்து இப்படி தங்களது படத்தின் புரமோஷனுக்குப் பயன்படுத்துவதா என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அந்த டுவீட்டை ஜிவி பிரகாஷ் டெலிட் செய்துவிட்டார். நேற்றைய கேதார் ஜாதவ் டுவீட்டிற்கான காரணம் என்ன என்பதை இன்று மாலை 5 மணிக்குத் தெரிய வந்தது. ஜிவி பிரகாஷ் அடுத்து நடிக்கும் 'அடியே' என்ற படத்தின் மோஷர் போஸ்டர் வெளியீட்டிற்காக அப்படி செய்துள்ளனர். மேலும், அந்த மோஷன் போஸ்டரில் சில நடிகர்களையும் கிண்டல் செய்துள்ளார்கள்.

இப்படி ஏதாவது சர்ச்சையைக் கிளப்பித்தான் தங்களது படத்தை ஓட வைக்க முடியும் என சில இயக்குனர்கள் நினைப்பது அவர்களின் கற்பனை வறட்சியைக் காட்டுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.