தரம்சாலா, திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா, கடந்த 1959ல் அறிவிக்கப்பட்ட, ‘ரமோன் மகசேசே’ விருதை, 64 ஆண்டுகளுக்கு பின் நேற்று நேரில் பெற்றுக் கொண்டார்.
‘ஆசியாவின் நோபல் பரிசு’ என அழைக்கப்படும், ‘ரமோன் மகசேசே’ விருது, தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே நினைவாக வழங்கப்பட்டு வருகிறது.
திபெத் புத்த மதத்தில், தலாய் லாமா ஆற்றிய சேவைகளை அங்கீகரித்து, 1959ல், அவருக்கு, ‘ரமோன் மகசேசே’ விருது அறிவிக்கப்பட்டது.
இந்த விருதை, தலாய் லாமா சகோதரர் கியாலோ தொண்டேன், 1959 ஆகஸ்டில், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த நிகழ்ச்சியில், அவரது சார்பாக பெற்றார். எனினும், தலாய் லாமாவிடம் விருதை நேரில் வழங்க வேண்டும் என்பது, ‘ரமோன் மகசேசே’ விருது அறக்கட்டளை நிர்வாகிகளின் கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில் நேற்று, ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் தரம்சாலாவில் உள்ள வீட்டில், தலாய் லாமாவை, ‘ரமோன் மகசேசே’ விருது அறக்கட்டளை தலைவர் சுசன்னா பி அபான், அறக்கட்டளை அறங்காவலர் எமிலி ஏ அப்ரேரா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அப்போது, 1959ல் அறிவிக்கப்பட்ட ‘ரமோன் மகசேசே’ விருதை அவரிடம் நேரில் வழங்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement