அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் அவரது திருமண ஆடையை தீயிட்டு எரித்து கணவருடனான விவாகரத்தை கொண்டாடியுள்ளார்.
திருமண ஆடையை எரித்த பெண்
அமெரிக்காவை சேர்ந்த லாரன் புரூக்(31) என்ற பெண் ஒருவர், போட்டோஷூட்டில் ஒன்றில் அவரது திருமண ஆடையை எரித்து கணவருடனான விவாகரத்தை கொண்டாடியுள்ளார்.
லாரன் புரூக்கிற்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலான திருமண பந்தத்திற்கு பிறகு செப்டம்பர் 2021ல் கணவரிடமிருந்து பிரிந்தார்.
இதையடுத்து இந்த ஆண்டு ஜனவரியில் லாரன் புரூக்கிற்கும் அவரது கணவருக்கும் சட்டப்படி விவாகரத்து முடிந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் லாரன் புரூக் மேற்கொண்ட போட்டோஷூட் ஒன்றில், அவரது திருமண புகைப்படத்தை கிழித்ததுடன் திருமண ஆடையை தீயில் எரித்து விவாகரத்தை கொண்டாடியுள்ளார்.
இனி கவலை தேவையில்லை
இது தொடர்பாக மிரர் யுகே-யிடம் லாரன் புரூக் வழங்கியுள்ள விளக்கத்தில், விவாகரத்து என்பது கடினமானது மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வேதனையானது என்ற உண்மையை காட்டுவதே இதன் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தினமும் காலை எழுந்ததும் அழும் நாட்கள் உண்டு, வாழ்க்கை முன்னேறவே முன்னேறாது என்று நினைத்து வருந்திய நாட்கள் உண்டு, ஆனால் தற்போது நாங்கள் விவாகரத்து செய்து கொண்டு உள்ளோம், இப்போது நான் காலையில் எழுந்து அழுவதில்லை, மிக சிறப்பாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.
லாரன் புரூக்கின் விவாகரத்து கொண்டாட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பபிட்டி என்ற பக்கத்தில் பகிரப்பட்டன.
அதில் அவர் சிவப்பு நிற உடையுடன் அவரது திருமண ஆடையை கிழிப்பதை காணலாம்.