
நாளை வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் – 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டு நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நாளை வெளியாகிறது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பொதுவாக பெரிய ஹீரோக்கள் படம் என்றால் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும். அதிலும் பொன்னியின் செல்வன் பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ள படம்.

ஆனால் தற்போது வரை படத்திற்கு சிறப்பு காட்சிகள் இருப்பது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணி முதல் திரையிடப்படும் என்றே தெரிகிறது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் – 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அனுமதியின்றி காட்சி ஒளிபரப்பபடுகிறதா என்று கண்காணிக்க வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்களுக்கு மதுரை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
newstm.in