சென்னை: ai போட்டோக்கள் இப்போது மிகவும் பிரபலமாகிக வருகறது .ஒரிஜினல் போலவே இருக்கும் சில புகைப்படங்களை பார்ப்பவர்களை அசரடித்து விடும். சாதாரண புகைப்படங்களை நம் விருப்பத்திற்கு எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும்.
வெள்ளை அல்லது பிளைன் பேக்ரவுண்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, எப்படி வேண்டுமானாலும் மாற்றி தருகிறது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தளம்.
செயற்கை நுண்ணறிவு என்பது நம் தேவைக்காக நாமே கண்டுபிடித்த ஏழாம் அறிவு தான். சாதாரண மனிதனால் செய்ய முடியாத எல்லா வேலைகளையும் ஏஐக்களால் செய்ய முடியும். இந்த ஏஐக்களை எப்படி வடிவமைக்கிறோமோ அதுபோல் செயல்படும். களிமண்ணை கொடுத்து வடிப்பது போல் தான் இந்த வேலை. எதற்கு தயார் படுத்துகிறீர்களோ, அந்த வேலையை இந்த ரோபோக்கள் கச்சிதமாக செய்யும்.
அப்படித்தான் புகைப்படத்தை அழகாக எடுப்பதற்காக பல ஏஐக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் நம் கல்யாணத்தில் கூட ஏஐக்கள் பொண்ணு மாப்பிள்ளையை விதம் விதமாக போட்டோ எடுத்து தள்ளினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
அண்மையில் ப்ரி வெட்டிங் போட்டோ சூட் ஒன்று சாக்கடையில் எடுக்கப்பட்டிருந்தது. அந்த புகைப்படங்களை ஏஐ இல்வைத்து வேறவெலவில் மாற்றி உள்ளதாக கூறுகிறார்கள் நெட்டிசன்கள்.
அந்த போட்டோக்களை பார்த்திருந்தால் நீங்களே திகைத்து போய் விடுவீர்கள். அந்த அளவிற்கு அசரடித்துள்ளது ஏஐ. ஆனால் அது ஏஐ வேலையா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை. இதுவரை யாரும் அதை ஏஐ செய்த வேலை என்று அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தவில்லை.
சரி விஷயத்திற்கு வருவோம். செந்தழல் ரவி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புராடக்ட் போட்டோ எடுப்பது எப்படியான சவாலான வேலை என்று புகைப்பட கலைஞர்களுக்கு தெரியும். இடம் தேர்வு செய்தல், ப்ராப்பர்டிஸ், வெளிச்சம் என சவாலான வேலை.
https://magicstudio.com என்ற செயற்கை நுண்ணறிவியல் தளம் இந்த வேலையை இல்லாமல் செய்கிறது.
சாதாரண கேமராவில் எடுத்த படம் ஒன்றை கொடுத்து எப்படியான படம் வேண்டும் என்று கேட்டால் போதும். பல படங்களை, பல பின்னணியுடன் கொடுத்து அசத்துகிறது.
வெள்ளை பின்னணியில் எடுத்த மேங்கோ லஸ்ஸி படம் நான் கொடுத்தேன். மற்ற மூன்றும் கணினியின் வேலை. எடுத்த நேரம் மொத்தம் 1 நிமிடம்.” இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் படங்களையும் இணைத்துள்ளார்.