வந்தே பாரத் vs சதாப்தி எக்ஸ்பிரஸ்: வேகம், வசதிகள், டிக்கெட் கட்டணம்… இரண்டில் எது சிறந்தது?

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… கடந்த சில மாதங்களாக இந்தியர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுள்ளது. செம ஸ்பீடு, விமானத்தில் இருப்பது போன்ற வசதிகள், அதிக கட்டணம் எனப் பல்வேறு விஷயங்கள் பேசுபொருளாக மாறியிருக்கின்றன.

எந்த ரயில் சிறந்தது?

ஏற்கனவே அதிவிரைவு சதாப்தி எக்ஸ்பிரஸ் சேவை அமலில் இருக்கும் போது, புதிதாக வந்துள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஒப்பீட்டளவில் எப்படி இருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் எழத் தான் செய்கிறது. இதில் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக இந்த எக்ஸ்பிரஸ் தான் சிறந்தது எனச் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு பிரிவாக பார்க்கும் போது ’சூப்பராக உள்ளது’ என்ற பார்வை மாறுபடுகிறது.

வெளிநாட்டு ஏற்றுமதி

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்களின் தேவை என்பது பிற ஆசிய நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமிருக்கிறது. எனவே இந்தியாவில் இருந்து ரயில் பெட்டிகள் ஏற்றுமதி மூலம் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சென்னை ஐ.சி.எஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் மாதத்திற்கு இரண்டு ரயில்கள் வீதம் தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்சதாப்தி எக்ஸ்பிரஸ்பயன்பாட்டில் உள்ள ரயில்கள்1321பயணிகளை கையாளும் திறன்1,1281,103கால் வைப்பதற்கான இட வசதி910 மி.மீ910 மி.மீ (ஏசி சேர் காரில் சற்று குறைவாக உள்ளது; எக்ஸிக்யூடிவ் கிளாஸில் அதிகமாக இருக்கிறது)டிக்கெட் விலைஏசி சேர் கார் – ரூ.1,200; எக்ஸிக்யூடிவ் கிளாஸ் – ரூ.2,295ஏசி சேர் கார் – ரூ.1,000; எக்ஸிக்யூடிவ் கிளாஸ் – ரூ.1,950; அனுபிதி – ரூ.2,280பெட்டியின் அளவு24 மீட்டர் நீளம் மற்றும் 3.2 மீட்டர் அகலம்23.5 மீட்டர் நீளம் மற்றும் 3.2 மீட்டர் அகலம்வசதிகள்இருக்கைக்கு மேல் லக்கேஜ் வைக்கும் வசதி, ஒவ்வொரு இருக்கைக்கும் சார்ஜ் வசதி, தானியங்கி கதவுகள், தொடுதலின்றி வசதிகள், இரண்டு Vaccum கழிவறைகள்தலை சாயும் வசதி, இருக்கைக்கு மேல் லக்கேஜ் வைக்கும் வசதி, இருக்கையை பின்னோக்கி வளைத்துக் கொள்ளும் வசதி, தானியங்கி கதவுகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.