அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பிய போது அரசியல் முதிர்ச்சி உள்ள நபர்கள் குறித்து கேளுங்கள் என்று கூறிவிட்டு, தற்போது பாஜகவுடன் எந்த தகராறும் இல்லை என்று கூறி அந்தர் பல்டி அடித்திருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானபிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அப்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என தெரிவித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை என கூறினார்.
சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் பாஜகவினர் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே. அண்ணாமலை அதிமுகவை ஒரு கட்சியாகவே மதிக்காதது போன்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
அதுகுறித்து கேள்வி எழுப்பிய போது எடப்பாடி பழனிசாமி, அரசியல் அனுபவம் இல்லாதவர்கள் குறித்து என்னிடம் கேள்வி எழுப்பாதீர்கள், அரசியலில் முதிர்ச்சி வேண்டும் என்று அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்தார்.
ஆனால் தற்போது தமிழக பாஜக உடன் தங்களுக்கு எந்த தகராறும் இல்லை என்று கூறியுள்ளார். இதற்கு பொதுமக்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அந்தர் பல்டி அடித்துவிட்டதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.
newstm.in