ரஷ்ய போர் விமானம் திடீரென தீப்பற்றி ஏரியில் விழுந்து விபத்து

ரஷ்ய போர் விமானம் ஒன்று பயிற்சியின் போது தீப்பற்றி, ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

மிக்-31 ரக போர் விமானம் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, விமானத்தின் ஒரு என்ஜினில் திடீரென தீப்பற்றியுள்ளது. இதில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம், Rizh-Guba தீவுக்கு அருகேயுள்ள மர்மன்ஸ்க் பகுதியில் உள்ள ஏரியில் விழுந்தது.

அந்த விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிர் தப்பியதாகவும், அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.