கர்நாடகா: “25 ஆண்டுக்கால வளர்ச்சிக்கான திட்டம்… இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு!" – பிரதமர் மோடி

கர்நாடகா சட்டசபைத் தேர்தல் மே 10-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதோடு மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான 224 வேட்பாளர்கள் பட்டியலில் 50-க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்கு பா.ஜ.க வாய்ப்பு வழங்கியிருக்கிறது. இதன் விளைவாக ஜெகதீஷ் ஷெட்டர், லக்ஷ்மண் சவடி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்குத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதன் காரணமாகவே சிலர் பா.ஜ.க-விலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கர்நாடகா தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

இது கர்நாடக பா.ஜ.க தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கர்நாடக பா.ஜ.க தொண்டர்களுடன் காணொளி வாயிலாக உரையாடிய பிரதமரின் மோடி,”பா.ஜ.க-வுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் அணுகுமுறை. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கான பாதையின் வரைபடத்தில் பா.ஜ.க தீவிரமாகச் செயல்படுகிறது. நமது போட்டியாளர்களின் செயல்திட்டம் ஆட்சியைப் பிடிப்பதுதான். ஆனால் நமது செயல்திட்டம் 25 ஆண்டுகளில் இந்த நாட்டை வளர்ச்சியடையச் செய்வது.

வறுமையிலிருந்து விடுபடவும், இளைஞர்களின் திறனை மேம்படுத்தவும், அடுத்த 25 ஆண்டுகளில் மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்துக்குத் தலைமை தாங்கும் வகையில் கர்நாடகாவில் இளம் அணியை பா.ஜ.க உருவாக்கி வருகிறது. கர்நாடகாவில் பெங்களூரு போலப் பல உலகளாவிய மையங்களை உருவாக்குவது எங்கள் முயற்சி. இரட்டை இன்ஜின் ஆட்சி என்பதன் பொருள் வளர்ச்சியின் இரட்டை வேகம். பா.ஜ.க-வின் இரட்டை இன்ஜின் அரசு இருக்கும் இடங்களில் ஏழைகளுக்கான நலத்திட்டங்கள் வேகமாகச் செயல்படுத்தப்படுவதை அனுபவபூர்வமாக உணர்கிறோம்.

பிரதமர் நரேந்திர மோடி

ஆனால், சில மாநிலங்கள் திட்டங்களின் பெயரை மாற்றுகின்றன. இன்னும் சில நாள்களில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காகக் கர்நாடகாவுக்கு வரவிருக்கிறேன். கர்நாடகா மக்களின் ஆசீர்வாதத்தைப்  பெறவிருக்கிறேன். பா.ஜ.க-வின் தேர்தல் பிராசரகர்கள் வரும்போதெல்லாம் மக்கள் அளப்பரிய அன்பை வழங்குகிறார்கள். இது பா.ஜ.க-மீதான மக்களின்  நம்பிக்கையைக் காட்டுகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.