ஒரே டெஸ்டில் முதல் இரட்டை சதத்தை விளாசிய இரு இலங்கை வீரர்கள்!


அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இலங்கை வீரர்கள் மதுஷ்கா மற்றும் குசால் மெண்டிஸ், தங்கள் முதல் இரட்டை சதத்தினை பதிவு செய்துள்ளனர்.

முதல் இரட்டை சதம்

காலேவில் நடந்து அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி முன்னிலை வகித்து வருகிறது.

இந்த டெஸ்டில் தொடக்க வீரரான நிஷன் மதுஷ்கா மற்றும் குசால் மெண்டிஸ் இருவரும், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தினை அடித்துள்ளனர்.

மிரட்டல் கூட்டணி

மதுஷ்கா ஒரு சிக்ஸர், 22 பவுண்டரிகளுடன் 205 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மதுஷ்கா – மெண்டிஸ் கூட்டணி இரண்டாவது விக்கெட்டுக்கு 268 ஓட்டங்கள் குவித்தது.

அதிரடியில் தொடர்ந்து மிரட்டும் குசால் மெண்டிஸ் 245 ஓட்டங்களுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 51 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

இலங்கை அணி 629 ஓட்டங்கள் எடுத்துள்ளதால், 137 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கிறது.

மதுஷ்கா-மெண்டிஸ்/Madushka-Mendis Image: Getty Images



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.