சமந்தா நடிப்பில் கடைசியாக சாகுந்தலம் படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் கடும் விமர்சனத்துக்குள்ளானார் சமந்தா. ஆனால் விமர்சனங்கள் பற்றியெல்லாம் கவலைப்படாத நடிகை சமந்தா, தனது படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சிட்டாடல் வெப் தொடர் குழுவுடன் தான் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் சமந்தா.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Nayanthara: நயன்தாராவை நடுரோட்டில் அழவிட்டேன்… மனம் திறந்த விக்னேஷ் சிவன்!
இந்நிலையில் நடிகை சமந்தா மருத்துவமனையில் தான் ஆக்ஸிஜன் சப்போர்ட்டில் சிகிச்சை பெற்ற போட்டோக்கள், ஜிம்மில் வொர்க் அவுட் செய்த போட்டோக்கள் என பல்வேறு போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். பிரபல தயாரிப்பாளர் சிட்டி பாபு நடிகை சமந்தா ‘வயதானவர், சகுந்தலாவின் சின்னமான அழகுக்கு ஏற்றவர் அல்ல’ என்று விமர்சனம் செய்திருந்தார்.
இதையடுத்தே சில நாட்களுக்குப் பிறகு, சமந்தா ரூத் பிரபு மருத்துவமனை சிகிச்சைகள், ஜிம் அமர்வுகள் மற்றும் பலவிதமான பயிற்சி அமர்வுகளுக்கு இடையில் எப்படி மாறியிருக்கிறார் என்பதைப் பற்றிய ஒரு காட்சியைப் பகிர்ந்துள்ளார். அதில் முதல் படமான தனது 16 வயது போட்டோவை பதிவிட்டுள்ளார் சமந்தா.
Alia Bhatt: தங்கச்சிக்கு பல கோடி மதிப்பில் காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்த ஆர்ஆர்ஆர் பட நடிகை ஆலியா பட்!
அதனை தொடர்ந்து இரண்டாவதாக தனது செல்ல நாய்களின் போட்டோக்களை பகிர்ந்துள்ளார் சமந்தா. அடுத்ததாக மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்போர்ட்டில் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். நான்காவதாக ஹைபர்பேரிக் சிகிச்சை பற்றிய கூகுள் தேடல் பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட்டையும் ஷேர் செய்துள்ளார் சமந்தா.
மேலும் நடிகை சமந்தா தனது குதிரை சவாரி மற்றும் ஜிம் அமர்வுகளின் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். போட்டோஷூட்டில் இருந்து ஒரு சிறு துணுக்கையும் பகிர்ந்துள்ளார். இத்தனை போட்டோக்களையும் வீடியோக்களையும் “நான் பார்க்கிறேன்” என்ற ஒரு எளிய கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார் நடிகை சமந்தா.
Trisha: பிங்க் நிற பட்டு சேலையில் திருச்சியை திணறடித்த குந்தவை… த்ரிஷாவின் லேட்டஸ்ட் பிக்ஸ்!
சமந்தா மருத்துவமனை போட்டோவை பார்த்த ரசிகர்கள் பதறியுள்ளனர். நடிகை சமந்தா குணசேகர் இயக்கத்தில் வெளியான சாகுந்தலம் படத்தில் சகுந்தலையாக நடித்தார். இந்தப் படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் ஹீரோவாக நடித்திருந்தார். பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கடந்த 14 ஆம் தேதி இப்படம் வெளியானது. ஆனால் இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
நடிகை சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்திலும் வருண் தவானுடன் சிட்டாடல் வெப் தொடரிலும் பிஸியாக உள்ளார். மேலும் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா அதற்கும் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Samantha: குஷ்பு, நயன்தாரா, ஹன்சிகா, நமீதாவை தொடர்ந்து… சமந்தாவுக்கும் கோவில்… எங்கேன்னு பாருங்க!