விமல் வீரவன்சவினால் தெரிவிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் விளக்கம்

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் முன்னாள் இராணுவ தளபதி தொடர்பில் பா. உ. விமல் வீரவன்ச அவர்களால் தெரிவிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

தென் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நட்பு நாடுகளுக்கிடையே ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு மாநாடான கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நிலை கூட்டம் 2022 ஜூலை 07ஆம் திகத அன்று இந்தியாவில் நடைபெற்றது.

அப்போதைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியின் கீழ் இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி (CDS) மற்றும் முன்னாள் இராணுவத் தளபதியான ஜெனரல் ஷவேந்திர சில்வா இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அக்கூட்டத்தில் பங்கேற்றார் என்பதை பாதுகாப்பு அமைச்சு வலியுறுத்துகிறது.

ஹிரு தொலைக்காட்சியின்(ஏப்ரல் 26) இடம்பெற்ற ‘பத்தரே விஸ்தரே’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்கிரம, கௌரவ. விமல் வீரவன்ச பா. உ. தனது ‘நவய: சங்கவுனு கதாவ’ (ஒன்பது; மறைக்கப்பட்ட கதை) நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றுகையில் :- 2022ஆம் ஆண்டு மே 09 அன்று நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியில் இருந்தவர்களின் முதல் திட்டம் அப்போதைய நிறைவேற்று ஜனாதிபதியையும் பாதுகாப்புத் தலைவர்களையும் ஜனாதிபதி மாளிகையில் வைத்து படுகொலை செய்வதே என்றும் ஜெனரல் சவேந்திர சில்வாவின் இந்திய விஜயம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என குற்றம் சாட்டியிருந்தார்.

இதன்படி, மேற்படி கருத்து அடிப்படையற்றது எனவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் வலியுறுத்துவதுடன், பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அப்போதைய இலங்கை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்துடன் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பதை மேலும் வலியுறுத்துகிறது.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.