வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : புதுடில்லி மதுபானக் கொள்கை வழக்கில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கோர்ட் காவல் மே. 12 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைநகர் புதுடில்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் நடந்த பல கோடி ரூபாய் முறைகேடு குறித்து சி.பி.ஐ. , மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக ஆம் ஆத்மி மூத்த தலைவரும் புதுடில்லி துணை முதல்வராக இருந்தவருமான மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
![]() |
இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை ஜாமினில் விட வேண்டி டில்லி கோர்ட்டில் மணீஷ் சிசோடியா தாக்கல் செய்துள்ள மனுவை நீதிபதி எம்.கே. நக்பால் வரும் ஏப்.28-ல் விசாரணை நடத்துகிறார்.
இந்நிலையில் இன்று நடந்த விசாரணையில் மணீஷ் சிசோடியா கோர்ட் காவல் மே.12 வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது.
பின் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையின் நகல் மணீஷ் சிசோடியாவிற்கு வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement