துவங்கியது பிரமாண்ட வேளாண் கண்காட்சி!
உலக அளவில் விவசாயத்துறையில் நடைபெற்று வரும் மாற்றங்கள், கடைக்கோடி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், விகடன் குழுமம் நடத்தும் `பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ – 2023’ எனும் பிரமாண்ட வேளாண் கண்காட்சி இன்று திருச்சியில் துவங்கியது.
சிறப்பு அழைப்பாளராக…
-
விவசாயி மற்றும் திரைக்கலைஞர் கருணாஸ்,
-
வேளாண் ஏற்றுமதிக்கு உதவும் அபிடாவின் உதவிப் பொது மேலாளர் முத்தையா,
-
வெள்ளாட்டுப்பால் விற்பனையில் மாதம் ரூ.4 லட்சம் லாபம் ஈட்டும் கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்ட விவசாயி ஸ்ரீனிவாஸாச்சார்யா ஆகியோர் கலந்து கொண்டனர்…
இன்றைய நிகழ்வில் விவசாயிகளுக்கு வழிகாட்டும் விதமாக முனைவர் எம்.நாச்சிமுத்து, செம்மரச் செம்மல் ஆர்.பி.கணேசன் ஆகியோர் பேச உள்ளனர்.
இந்தக் கண்காட்சிக்குத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம், அபிடா, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், ஆனந்தா விவசாய தீர்வகம் நிறுவனம் ஆகியவை தங்களது ஆதரவை வழங்கியுள்ளன.
மேலும், வேளாண் வல்லுநர்கள், நிபுணர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் வருகை தந்துள்ளனர்.