சென்னை: அமித் ஷா – எடப்பாடி – அண்ணாமலை மீட்டிங் காரணமாக, டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோருக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்து உள்ளது.
நேற்று முதல் நாள் டெல்லியில் அண்ணாமலை – அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி இடையில் டெல்லியில் நடந்த மீட்டிங் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது. தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி அமைவதற்கான சூழ்நிலையை இந்த மோதல் ஏற்படுத்தி உள்ளது.
அந்த சந்திப்பில் சுமார் 50 நிமிடங்கள் இவர்கள் நீண்ட ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த மீட்டிங்கிற்கு பின் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எங்களுக்கு எந்தவித தகராறும் இல்லை, என்று எடப்பாடி பழனிசாமி புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
இவர்கள் மூவரும் நடந்திய டெல்லி மீட்டிங்கில் என்ன நடந்தத்த்து என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், அதிமுகவால் தனியாக நிற்க முடியாது. அதை அவர்கள் உணர்ந்து கொண்டனர். அதனால்தான் பாஜகவுடன் கூட்டணி வைக்க நினைக்கிறார்கள். பாஜகவை விட்டால் நமக்கு வேறு யாரும் இல்லை என்பது எடப்பாடிக்கு தெரியும்.
ஓபிஎஸ்ஸை பற்றி பேச வேண்டாம். நாங்கள் எங்கள் வாக்கு சதவிகிதம் பற்றி பார்த்துக்கொள்கிறோம். தேர்தல் ஆணையம் எங்களை ஒப்புக்கொண்டனர். அதனால் ஓபிஎஸ் பற்றி எங்களிடம் பேச வேண்டாம்.
அவர் விவகாரத்தில் பாஜக தலையிட வேண்டாம். அண்ணாமலை – எடப்பாடி மோதல் எல்லாம் கிட்டத்தட்ட டிராமா மாதிரிதான். இவர்கள் மோதிக்கொள்வது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அடிப்படையில் இரண்டு பேருமே மோதிக்கொள்வது போல இருந்தாலும் கூட உள்ளே ஒற்றுமையாகவே இருக்கிறார்கள்.
நேற்று கூட்டணி உறுதியாகிவிட்டது என்பதே இந்த மீட்டிங்கில் எடுக்கப்பட்ட முடிவு. எத்தனை இடங்களில் போட்டி என்பதை பின்னர் முடிவு செய்யலாம். அதை பற்றி இப்போது பேச வேண்டாம். வழக்கு எல்லாம் முடியட்டும். அதை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி உள்ளனர்.
நேற்று மீட்டிங்கில் நடந்த இன்னொரு விஷயம் – டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ், பாஜகவின் மெகா கூட்டணி முடிவிற்கு வந்துவிட்டது. அந்த பார்முலா அடிபட்டு விட்டது. அந்த மீட்டிங்கில் ஜே பி நாட்டாவும் இருந்தார். இவர்கள் 1 மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.
அதனால் எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டனர். அதிமுக நீங்கதான் என்ற விஷயத்திற்கு பாதிப்பு வராது என்று எடப்பாடிக்கு டெல்லி உறுதி அளித்து உள்ளது. அதனால் ஓபிஎஸ் இனி அதிமுகவிற்கு வருவது சிக்கல்தான். நேற்று எல்லா பிரச்சனையும் முடிந்துவிட்டது.
டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ், பாஜகவின் மெகா கூட்டணி என்ற திட்டமே முடிவிற்கு வந்துவிட்டது. இனிமேல் அதிமுகவிற்கு பிரச்சனை இல்லை. டெல்லி எந்த பிரஷரும் கொடுக்காது. அமலாக்கத்துறை, சிபிஐ மோதல் எல்லாம் இருக்காது.
அதேபோல் திமுக ஏதாவது நடவடிக்கை எடுத்தாலும் கூட பாஜக சப்போர்ட் இருக்கும். இனி ஓபிஎஸ் உள்ளே வருவது சிக்கல்தான். அண்ணாமலைக்கு வேறு ஆப்ஷன் இல்லை. அவரும் மேலிடம் சொல்வதை கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும்.
தலைவராக இருப்பதால் மேலிடம் சொல்வதை கேட்டுக்கொண்டு நடக்க வேண்டும். அவர் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ரெடியாக இருக்க மாட்டார். இப்போதும் கூட கூட்டணிக்கு யார் தலைமை என்ற பிரச்சனை உள்ளது.
இன்னும் 6- 7 மாதங்கள் உள்ளன. அதனால் மீண்டும் பிரச்சனை வரலாம். அண்ணாமலை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு நடக்க வேண்டும். பாஜக மேலிடமோ.. சீட் எல்லாம் பற்றி கவலைப்பட வேண்டாம். கூட்டணி பற்றி நீங்கள் யோசிக்க வேண்டாம். பாஜகவை பலப்படுத்துவதை பற்றி நீங்கள் யோசிங்கள் என்று அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.
எடப்பாடி வீக்காக இருக்கிறார். அவர் வரிசையாக பல தேர்தல்களில் தோல்வி அடைந்துவிட்டார். அதனால் எடப்பாடியிடம் கண்டிப்பாக பாஜக கூடுதல் இடங்களை கேட்கும், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.