ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாட கிடைத்தது என்னை அடையாளப்படுததிக்கொள்ள கிடைத்த சிறந்த சந்தர்ப்பம்

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடியதே என்னை சிறந்த துடுப்பாட்ட வீரராக அடையாளப்படுத்த மிகவும் பொருத்தமான இடத்தைக் கொடுத்ததாக புதுமுக வீரர் நிஷான் மதுஷ்க தெரிவித்துள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் முடிவில் இரட்டை சதத்தை பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘என்னுடைய மூன்றாவது போட்டியிலேயே இரட்டை சதம் பெற்றதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முன்பிருந்தே நான் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக துடுப்பாட்ட ம் செய்து கொண்டிருந்தேன். நியூசிலாந்து சென்று விக்கெட் கீப்பிங் செய்து மிடிலில் விளையாட வேண்டியிருந்தது. எனது முந்தைய போட்டிகள் அனைத்திலும் நான் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக துடுப்பாட்டத்தை செய்ததால் எனக்கு இப்போது சரியான இடம் கிடைத்து விட்டது என்று நினைக்கிறேன். எனவே இந்த போட்டியிலும் நான் அதிக ஓட்டங்களை அடிக்க முடிந்தது. இது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று குறிப்பிட்டார்.

நிஷான் மதுஷ்க 22 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 205 ஓட்டங்கள் எடுத்து இலங்கை அணிக்காக தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தார். அவர் பங்கேற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்த இரட்டை சதம் அடித்துள்ளது சிறப்பானதொரு விடயமாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.