தினமும் இட்லி தோசை என்று சாப்பிடாமல் ஏதாவது வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் மகிழ்ச்சி தான்.
பெரும்பாலும் குழந்தைகள் எல்லாம் முட்டை சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஆகவே முட்டையை வைத்து இலகுவாக எப்படி சுவையான ரொட்டி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மா – 01கப்
- உப்பு – தேவையானளவு
- தண்ணீர்
- எண்ணெய்
- முட்டை
- கொத்தமல்லி
- வெங்காயம்
- மஞ்சள்
- பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை
- மிளகுதூள்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் மா மற்றும் உப்பு சேர்த்து போதுமானளவு தண்ணீரும் சேர்த்து கலந்து சப்பாத்தி செய்யும் பதத்திற்கு செய்ய வேண்டும்.
- பின் ஒரு கிண்ணத்தில் முட்டை கொத்தமல்லி, வெங்காயம், மஞ்சள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மிளகுதூள் சேர்த்து கலந்து எடுக்க வேண்டும்.
- பின் மாவை மெல்லியதாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
பிறகு ரொட்டி சுடுவதில் இட்டு அதன் மேல் தயாரித்து வைத்த முட்டையை ஊற்ற வேண்டும்.
-
அந்த மாவை சிறுது நேரத்தில் முட்டையை சுற்று மடித்துவிட வேண்டும்.
-
இவ்வாறு செய்து, ரொட்டியை போன்று சுட்டு எடுத்தால் மொறுமொறுப்பான ஒரு முட்டை பராட்டா தயார்.