சென்னை கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி மதுபான எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபான கடையில் புகுந்து ஊழியர்களை பணத்தை கொள்ளை!
மதுப்பழக்கத்தால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்துள்ளன. சாதரணமாக ஆரம்பிக்கும் மது பழக்கம் நாளடைவில் அதற்கு அடிமையாக்கி விடுகிறது. அடிமையான நபர்கள் அதிலிருந்து மீள வழியில்லாமல், வீட்டின் சேமிப்புகளை எடுத்து குடிக்க தொடங்குகின்றனர். குடிக்கும் பழக்கம் பெரும்பாலும் 15 முதல் 25 வயதில்தான் ஆரம்பிக்கிறது. தமிழகத்தில் நடைபெறும் 50 முதல் 60 சதவிகித சாலை விபத்துகள் குடிபோதையினால்தான் ஏற்படுகின்றன என்று கூறுகிறது ஆய்வு ஒன்று.
மதுவில் உள்ள ஆல்கஹால் மூளையில் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக்கூட அதிக அளவு மது தேவைப்படுகிறது. இதனால் அந்த மோன நிலையை அடைய அதிகமான மது தேவைப்படுகிறது. ஏற்கனவே குடித்த அளவு உடலுக்கு தற்போது பழகிவிட்டதால் போதை ஏற அதிகளவு மது தேவைப்படும் நிலையில், மதுவிற்கு அடிமையாகும் தருணம் ஆரம்பமாகிறது.
மதுவினால் சீரழிந்த குடும்பங்கள் ஏராளமாக உள்ளன. நாள்தோறும் மதுவிற்குப் பழகிப்போன மூளையின் நரம்புகள், திடீரென குடியை நிறுத்தும்போது அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சில தொந்தரவுகளைத் தருவதால் மீண்டும் குடிப்பதை தூண்டுகிறது. போதைக்கு அடிமையானவர்கள் குடியை நிறுத்திய சில மணி நேரத்தில் கை, கால் நடுக்கம், தூக்கமின்மை, பதற்றம், வாந்தி, எரிச்சல் உணர்வு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடிக்காததால் தான் இப்படி ஏற்படுகிறது என நினைத்து மீண்டும் அவர்களை மூளை நரம்புகள் குடிக்க வைக்கிறது.
பல குடும்பங்கள் சிதைந்துள்ளதால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என பலமுறை போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. எதிர்கட்சியாக இருந்தபோது டாஸ்மாக்கிற்கு எதிராக பேசிய
, ஆளுங்கட்சியான பின் அதை கண்டு கொள்வதே இல்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. அதிக வருமான ஈட்டுமாறு அந்த துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழியர்களுக்கு ஆணையிட்டதும் இங்கு பேசுபொருளானது.
தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். குடும்ப பெண்கள் நிம்மதி பெரு மூச்சி விட்டநிலையில், தற்போது தானியங்கி மது பாட்டில்கள் வழங்கும் வசதியை தற்போது தமிழக அரசு வழங்கியுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பிரபல ஊடக நிறுவனம் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டி நெட்டிசன் ஒருவர் கூறும்போது, ‘‘ தமிழ்நாட்டில் 21 வயதுக்கு கீழானவர்கள் மது வாங்க தடை உள்ளது. ஆனால், கோயம்பேடு வி.ஆர். மால் வணிக வளாகத்தில் தானியங்கி மதுபான இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
தானியங்கி இயந்திரங்கள் மூலம் சிகரெட் விற்றால் சிறுவர்கள் வாங்க வாய்ப்பு உள்ளது என்பதால், இந்தியாவிலும், உலகின் பெரும்பாலான நாடுகளிலும் அதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் தானியங்கி எந்திரங்கள் மூலம் மதுபானம் விற்க தொடங்கியுள்ளது தமிழக அரசு’’ என்று தெரிவித்துள்ளார்.