ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Ponniyin Selvan 2 video: பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா லட்சுமி செய்த குறும்பு வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது.
பொன்னியின் செல்வன் 2Ponniyin Selvan 2: பொன்னியின் செல்வன் 2 படத்தை ஒத்த வார்த்தையில் விமர்சித்த ரசிகர்கள்: என்ன வார்த்தை தெரியுமா?மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. படம் பார்த்த அனைவரும் ஆஹோ, ஓஹோ, அற்புதம், வேற லெவல், சூப்பர், பயங்கரம் என பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விமர்சனங்களை எல்லாம் பார்த்து படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறது.
விளம்பரம்பொன்னியின் செல்வன் 2 படத்தை பிரமாண்டமாக எடுத்ததுடன் அதை பெரிய அளவில் பல்வேறு நகரங்களில் விளம்பரம் செய்யவும் செய்தார் மணிரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துபிபாலா உள்ளிட்டவர்கள் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா இடையேயான நட்பு அந்த நிகழ்ச்சிகள் மூலம் தெரிய வந்ததது.
Ponniyin Selvan 2: இது, இதுக்காகவே பொன்னியின் செல்வன் 2 படத்தை தியேட்டரில் தான் பார்க்கணும்
விக்ரம்தங்கலான் படத்திற்கு தன் தலைமுடியை நீளமாக வளர்த்திருக்கிறார் சீயான் விக்ரம். அதே கெட்டப்பில் தான் பொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சிகளில் ஸ்டைலாக கலந்து கொண்டார். அப்படியொரு நிகழ்ச்சியில் விக்ரமின் பின்னால் நின்ற ஐஸ்வர்யா லட்சுமி அவரின் முடியை பிடித்து இழுத்தார். அதை பார்த்த சோபிதாவோ செல்லமாக ஐஸ்வர்யா தலையில் அடித்துவிட்டு சிரித்தார். உடனே இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்.
சேட்டை
ஐஸ்வர்யா லட்சுமிசோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி இடையேயான நட்பை பார்த்த ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். மேலும் ஒரு விளம்பர நிகழ்ச்சியில் ஜெயம் ரவி பேசத் துவங்கியதும் ஆரம்பித்துவிட்டார் என சோபிதாவிடம் கூறினார் ஐஸ்வர்யா லட்சுமி. அதை பார்த்த ரசிகர்களோ, ஆரம்பிச்சுட்டான்யா என்பதை தான் ஐஸ்வர்யா ஆங்கிலத்தில் தெரிவித்திருக்கிறார். நல்லா கலாய்க்கிறார் என்றார்கள்.
கார்த்திPonniyin Selvan 2: ஜெயம் ரவி பற்றி கார்த்தி சொன்னது அப்போ புரியல இப்போ தான் புரியுதுபொன்னியின் செல்வன் 2 விளம்பர நிகழ்ச்சிகளில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்தன. சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் 2 ஆந்தம் வெளியீட்டு விழாவில் த்ரிஷாவின் கையை பிடித்து அவரை மேடையில் இருந்து இறக்கிவிட்டார் கார்த்தி. அதை பார்த்த ஜெயராம் மேடையை விட்டு நகரவில்லை. உடனே இம்சப்பா என்று கூறிவிட்டு வந்து ஜெயராமையும் கையை பிடித்து மேடையில் இருந்து இறக்கிவிட்டார்.
ஐஸ்வர்யா ராய்ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவியின் கையை பிடித்துக் கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தார் ஐஸ்வர்யா ராய் பச்சன். அப்பொழுது தெரியாமல் ஜெயம் ரவியை இடித்துவிட்டார். ஐஸ்வர்யா ராய் வெறியனான ஜெயம் ரவி சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். அதை பார்த்து ஐஸ்வர்யா ராயே சிரித்துவிட்டார்.
Ponniyin Selvan 2: தெரியாமல் இடித்த ஐஸ்வர்யா ராய்: குஷியில் ஜெயம் ரவி என்ன செய்தார் தெரியுமா?
ஜெயம் ரவிபெங்களூரில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் ரசிகைகள், தங்களை ஹக் செய்ய வேண்டும் என்று ஜெயம் ரவியிடம் கேட்டார்கள். உடனே அவர் மேடையில் இருந்து குதித்து வந்து அவர்களை ஹக் செய்தார்கள். அதை பார்த்து அங்கிருந்த அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். ஜெயம் ரவி இப்படி செய்ததை பார்த்த பிற ரசிகைகள் லைட்டா பொறாமைப்பட்டார்கள். எங்களுக்கெல்லாம் ஹக் இல்லையா என கேட்டார்கள்.
Ponniyin Selvan 2: இதுலாம் நியாயமே இல்ல ஜெயம் ரவிணா: வருத்தத்தில் ரசிகைகள்