மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் தனியார் பேருந்து சாலையோரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர்.
ஆரப்பாளையத்தில் இருந்து போடி நோக்கி சென்ற தனியார் பேருந்து, திருமங்கலம் – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அதிவேகமாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விபத்தில் மேலதிருமாணிக்கத்தை சேர்ந்த குருசாமி, டி.ராமநாதபுரத்தை சேர்ந்த பிச்சை ஆகியோர் அந்த இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.