ஆதித்த கரிகாலன் பெண் மோகத்தால் இறந்தாரா? வரலாறு தெரியாத மணிரத்னம்.. உண்மையை உடைத்த பிரபலம்!

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

ஆதித்த கரிகாலன் மரணம் குறித்து வரலாறு தெரியாத மணிரத்னம் திரிந்து கூறியுள்ளார் என்று பிரபலம் ஒருவர் புட்டுபுட்டுவைத்துள்ளார்.

வரலாற்று திரிப்பு : மூத்த பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் யூடியூப் தளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், கல்கி பொன்னியின் செல்வன் நாவலை எழுதியதே வரலாற்றை திரிக்க வேண்டும் என்பதற்காகத்தான். பொன்னியின் செல்வன் நாவலை எழுதவேண்டிய தேவை கல்கிக்கு ஏன் வந்தது என்றார். ஆதித்த கரிகாலனை சதி செய்து கொன்றதை மறைப்பதற்காகத்தான் அந்த நாவலை கல்கி எழுதினார்.

வரலாறு தெரியாத மணிரத்னம் : ராஜராஜ சோழனின் அண்ணன் ஆதித்த கரிகாலன், கொல்லப்படுகிறார், யாரால் கொலை செய்யப்படுகிறார் என்பதுதான் வரலாற்றுத் திணிப்பு. சனாதனத்தை எதிர்த்ததால் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுகிறார். இதனால், இந்த வரலாற்றை கல்கி பொன்னியின் செல்வன் புத்தகத்தில் பதிவு செய்யவில்லை, வரலாறு தெரியாத மணிரத்னமும் ஆதித்த கரிகாலன் பெண் மோகத்தால் நந்தினி மீது இருந்த காதலால் இறந்தது போன்று பொன்னியின் செல்வன் படத்தில் பதிவு செய்துள்ளார்.

journalist Pandian in an interview say that, Mani Ratnam has hidded history in Ponniyin Selvan 2,

ஜெயமோகன் திரைக்கதை எழுதலாமா : பொன்னியின் செல்வன் படத்திற்கு கதை வசனம் எழுதியவர் ஜெயமோகன், அவர் கேளராவை பூர்வீகமாக கொண்டவர். அவர் தமிழரின் வரலாற்றை திரிக்கப்பிறந்தவர், அழிக்கப்பிறந்தவர் அவரை மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்திற்கு திரைக்கதை எழுத சொல்லி இருக்கிறார். கேரள இலக்கியவாதியை தமிழ்வரலாற்று படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுத சொல்லலாமா? இதேபோல கேரளாவில் நடந்து இருந்தால், அந்த படத்தை கேரள மக்கள் புறக்கணித்து தீயிட்டு கொளுத்தி இருப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில் திரிக்கப்பட்ட வரலாற்றை கொண்டாடி வருகின்றனர்.

காமெடியாக உள்ளது : அந்த படத்தில் ஒரு காட்சியில் கூட ராஜராஜ சோழனுக்கு உண்டான கம்பீரமே இல்லை. அந்த படம் முழுவதும் காமெடியாக இருக்கு. பழுவேட்டையாரை ஒரு பெண்பித்தனாக காட்டி இருக்கிறார்கள், பழுவேட்டையார் தான் சோழ மண்டலத்தின் படைத்தளபதியை ஐஸ்வர்யா ராய் பின்னால் சுற்றவிட்டுள்ளார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திட்டமிட்டு திரிக்கப்பட்டுள்ளது.

வேண்டும் என்றே : கேரளாவைச் சேர்ந்த ஜெயமோகனும், மணிரத்னமும் தமிழன் வரலாற்றை தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக வேண்டும் என்றே திட்டமிட்டு செய்து வருகிறார்கள் இதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என்று மூத்த பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டியில் தெளிவாக கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.