அமெரிக்காவின் தீர்மானத்தின் பின்னணியில் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி! வசந்த கரன்னாகொட தகவல்


தாமும் தமது குடும்பத்தினரும் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்த
அமெரிக்காவின் முடிவு குறித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக வடமேல் மாகாண
ஆளுநர் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த நடவடிக்கையின்
பின்னணியில் ‘வேறு ஏதோ ஒன்று’ இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை குறித்து தமக்கு சில சந்தேகங்கள் உள்ளன, இதன் பின்னணியில்
வேறு ஏதோ இருப்பதாக தாம் நம்புவதாகவும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொட
குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தீர்மானத்தின் பின்னணியில் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி! வசந்த கரன்னாகொட தகவல் | Us Ban Wasantha Karannagoda

அமெரிக்காவின் முக்கிய தீர்மானம்

“யுத்தம் முடிந்து 14 வருடங்களின் பின்னர் திடீரென
அமெரிக்கா தீர்மானம் எடுத்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தீர்மானத்தின் பின்னணியில் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி! வசந்த கரன்னாகொட தகவல் | Us Ban Wasantha Karannagoda

இந்த நடவடிக்கையின் பின்னணியில் இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரி மற்றும்
அமெரிக்க தூதுவர் ஆகியோர் இருப்பதாக தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் ஆவணப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் பிற
விசாரணைகள் தனக்கு எதிராக தடையை விதிக்க காரணங்கள் என்றும், தன்னார்வ தொண்டு
நிறுவனங்களின் அறிக்கைகளை அமெரிக்க ராஜாங்க திணைக்களம் பரிந்துரைப்பது
வெட்கக்கேடானது என்றும் அவர் கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.