ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
விஜய், த்ரிஷா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான மாஸ்டர் திரைப்படம் வெற்றிபெற்றாலும் அதில் சில குறைபாடுகள் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
எனவே அந்த குறைகளெல்லாம் சரிசெய்து முழுக்க முழுக்க தன் ஸ்டைலில் லியோ படத்தை படமாக்கி வருகின்றார் லோகேஷ். எப்படி விக்ரம் படத்தில் கமலை தன் பாணியில் காண்பித்தாரோ அதே போல லியோ படத்திலும் விஜய்யை தன் ஸ்டைலில் இயக்கி வருகின்றார் . எனவே லியோ திரைப்படத்தில் நாம் முற்றிலும் வித்யாசமான விஜய்யை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் தளபதியின் ரசிகர்கள் இருக்கின்றனர்.
AK62: இனி AK62 வே வேண்டாம்..அஜித் எடுத்த அதிரடி முடிவு ..காரணம் இதுதான்..!
மேலும் இப்படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து நடிக்கின்றனர். இவர்களை தொடர்ந்து சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் லியோ படத்தின் அப்டேட் அடுக்கடுக்காக வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. எனவே இனி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தான் லியோ படத்தின் அறிவிப்பு வெளியாகும் என தெரிகின்றது. அதற்குள் லோகேஷ் லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடுவாராம்.
முதல்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் கடுமையான சூழலில் நடத்தி முடித்த லோகேஷ் தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றார். பிரசாத் ஸ்டுடியோவில் மிகப்பிரமாண்டமாக செட் அமைத்து அதில் லியோ படப்பிடிப்பை படக்குழு நடத்தி வருகின்றது.
இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி லியோ படத்தில் சிங்கம் ஒன்று மிக முக்கியமான ரோலில் நடிக்கின்றதாம். CG யில் அந்த சிங்கத்தை பல கோடி செலவு செய்து படக்குழு உருவாகியுள்ளது படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கியமான ரோலில் அந்த சிங்கம் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன.
எனவே தான் அந்த சிங்கத்தை பல கோடி செலவு செய்து மிகவும் தத்ரூபமாக CG யில் படக்குழு உருவாக்கியுள்ளதாம். எனவே லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து அந்த சிங்கமும் பல காட்சிகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனாலும் இதைப்பற்றி எந்த ஒரு தகவலும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இணையத்தில் இந்த செய்தி தீயாய் பரவி வருகின்றது. இந்நிலையில் லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் மே மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என்று தகவல்கள் வருகின்றது குறிப்பிடத்தக்கது.