தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்எஸ் சக்கரவர்த்தி. தனது நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் அஜித்தின் ராசி, வாலி, சிட்டிசன், ரெட், வில்லன், ஜி, வரலாறு என்று நடிகர் அஜித் நடித்த படங்களை தயாரித்துள்ளார் எஸ்எஸ் சக்கரவர்த்தி. நடிகர் அஜித் இன்று மாஸ் நடிகராக இருப்பதற்கு காரணம் நிக் ஆர்ட்ஸ் எஸ்எஸ் சக்கரவர்த்தி அமைத்துக் கொடுத்த அடித்தளம்தான் என கூறப்படுகிறது.
ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
Nayanthara: ஓவியம் போல் இருக்கும் நயன்தாரா… க்யூட் போட்டோஸ்!
அஜித்தின் பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி. அஜித்தின் சினிமா கெரியரில் முக்கியமான படங்களாக கருதப்படும் வாலி, சிட்டிசன், ரெட், வில்லன், ஜி ஆகிய படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் எஸ்எஸ் சக்கரவர்த்தி, அஜித்தின் இந்த அசுர வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். சிம்பு நடித்த காளை, வாலு ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். விக்ரமின் காதல் சடுகுடு படத்தையும் தயாரித்துள்ளார் எஸ் எஸ் சக்கரவர்த்தி.
விமல் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த விலங்கு என்ற இணைய தொடரில் காவல் அதிகாரியாக நடித்திருந்தார். அவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் நிக் ஆர்ட்ஸ் எஸ்எஸ் சக்கரவர்த்தி கடந்த 8 மாதங்களாக புற்று நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். நிக் ஆர்ட்ஸ் எஸ்எஸ் சக்கரவர்த்தி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ சிகிச்சைக் கூட பணம் இல்லாமல் தவிப்பதாகவும் தகவல்கள் பரவி வந்தன.
Ponniyin Selvan 2: சரியா பேச்சுக்கூட வரல… பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த கார்த்தி உருக்கம்!
இந்நிலையில் நிக் ஆர்ட்ஸ் எஸ்எஸ் சக்கரவர்த்தி சிகிச்சை பலனின்றி நள்ளிரவு காலமானார். அவரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படவுள்ளது. தயாரிப்பாளர் எஸ்எஸ் சக்கரவர்த்தியின் மறைவிற்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது திடீர் மரணம் தமிழ் சினிமா பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
PS 2 Trisha: நானும் ஐஸ்வர்யாவும் விக்ரமை தூங்க விடமாட்டோம்… அவர் கத்துவார்… உருக்கமாக பேசிய த்ரிஷா!
அஜித் சினிமா கெரியரில் அதிக படங்களை தயாரித்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ் எஸ் சக்கரவர்த்தி. அஜித் நடிப்பில் வெளியான சுமார் 9 படங்களை தயாரித்துள்ளார். அஜித்துக்கு மிகவும் நெருக்கமான தயாரிப்பாளராகவும் இருந்தார் நிக் ஆர்ட்ஸ் எஸ்எஸ் சக்கரவர்த்தி. நடிகர் அஜித் சமீபத்தில் தனது தந்தையை இழந்தார். அந்த சோகத்தில் இருந்து நடிகர் அஜித் மீண்டு வருவதற்குள் அவரது நெருங்கிய நண்பரான நிக் ஆர்ட்ஸ் எஸ்எஸ் சக்கரவர்த்தி மரணம் அடைந்திருப்பது அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.