செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரிகள் திறக்கப்படும் தேதி குறித்த அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
பொது தேர்வு – தேர்தலுக்கு நிகரானது…! அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
கோடை வெயில் ஒரு பக்கம் சுட்டெரித்து வருகையில் கல்லூரி மாணவர்கள் தங்கள் செமஸ்டர் தேர்வுகளை எழுதி வருகின்றனர். செமஸ்டர் தேர்வுகள் முடிந்த பின்னர் எப்போது கல்லூரி திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். அதேபோல அரசு உதவிபெறும், தனியார் சுயநிதிக் கல்லூரி முதல்வர்களுக்கும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜூன் 19ஆம் தேதி அனைத்து அரசு, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பள்ளிகளைப் பொறுத்தவரை இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. நேற்றுடன் ஆண்டு இறுதித் தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோடை வெயில் காரணமாக மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு தள்ளிப் போக வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அப்படியான சூழல் ஏற்பட்டால் முதலமைச்சருடன் ஆலோசனை செய்து முடிவெடுப்போம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.